Saturday, August 1, 2015

சசிபெருமாள் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ்

 


டாஸ்மாக் கடையை மூடக்கோரி வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் நடந்த போராட்டத்தில் சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். 

சேலத்தில் உள்ள சசிபெருமாள் இல்லத்திற்கு சென்ற பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், சசிபெருமாளின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருககு ஆறுதல் கூறினார்.

சசிபெருமாள் மூத்த மகன் நவநீதன் தனது தந்தையாரின் கோரிக்கையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் சசிபெருமாள் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: