Saturday, August 1, 2015

மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ, திருமாவளவன் முழு அடைப்புக்கு அழைப்பு.. ராமதாஸ் மறுப்பு

சென்னை: மது விலக்கை வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு சில கட்சிகள் அழைப்புவிடுத்துள்ள நிலையில் அப்போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTமதுவிலக்குப் போராளியான, காந்தியவாதி, சசிபெருமாள் மரணம் அடைந்த நிலையில், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நிலைநாட்டக் கோரி, ஆகஸ்ட் 4ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன், ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸிடம் இப்போராட்டத்திற்கு ஆதரவு உண்டா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மது விலக்கை வலியுறுத்தி பாமக நீண்ட காலமாக போராடி வருகிறது. இப்போது திடீரென விளம்பரத்துக்காக போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் பாமக பங்கேற்காது என்று தெரிவித்தார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: