பா.ம.க. தலைமை நிலையச் செய்தி:
’’விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராம மக்கள் மீது கடந்த 16 ஆம் தேதி காவல்துறையினர் மிகக்கொடிய தாக்குதலை நடத்தியுள்ளனர். கருவுற்ற பெண்கள் மற்றும் சிறுவர்களை தாக்கி கைது செய்துள்ளனர். அந்த கிராம மக்களுக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப் பட்டுள்ளன.
இதற்குக் காரணமான காவல்துறை துணைத் தலைவர் சுமித் சரண், கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அப்பாவி மக்கள் மீது தொடரப்பட்ட பொய்வழக்குகளை திரும்பப்பெற ஆணையிட வேண்டும் என்று கோரி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் க.பாலு இன்று மனு அளித்தார்.’’
No comments:
Post a Comment