Saturday, June 6, 2015

மழை வேண்டி வருண பகவானுக்கு பூசை: மூடநம்பிக்கையையே அரசே பரப்புவதா? ராமதாஸ் கண்டனம்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப்பணித்துறையின் நீர்வளப்பிரிவு செயற்பொறியாளர்கள் அனைவரும் சிறப்பு பூசைகளை நடத்த வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந்தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூசைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார்கள். அதேபோல், ஜெயலலிதாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்டதன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழியில் செல்லத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதற்கு தலைமைப் பொறியாளர் முயல வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: