Sunday, December 2, 2012

டிசம்பர் 17ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்

திண்டிவனம்: டிசம்பர் 17ந் தேதி முக்கியமான நாள். டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம். அதில் பா.ம.க.வினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நானும் 2 திண்டுக்கல் பூட்டு வாங்கி வைத்துள்ளேன். போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
திண்டிவனத்தில் பாமக சார்பில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

மக்களுக்காக பாடுபடும் கட்சி பா.ம.க.தான். தமிழகத்தை ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகிறோம்.
தி.மு.க., அ.தி.மு.க. அரசு சரியான மின்திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதனால்தான் தற்போதைய மின்வெட்டு அவலத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டுள்ளது.

வருகிற தேர்தலில் எல்லா சாதிய இயக்கங்களும் மற்ற அமைப்புகளும் சேர்ந்து நாங்கள் அமைக்கும் கூட்டணியை அனைவரும் பாராட்டுகின்றனர். நாங்கள் தனியாக நிற்கிறோம். எந்த கட்சிக்கு இந்த தைரியம் வரும்? டாக்டர் ராமதாஸ் தேர்தல் வந்தால் மாறிவிடுவார் என கூறுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க.வை அகற்றி விட்டு பா.ம.க. புதிய அவதாரம் எடுத்துள்ளது. இது தான் நல்ல தருணம் என மாற்றத்தை கொண்டு வரும்படி காலதேவன் சொல்கிறான்.
ஜாதிய இயக்கங்களோடு தான் கூட்டணி அமைத்து தன்னிச்சையாக நிற்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. தனித்து நிற்க தயாரா? நாங்கள் இதுவரை தமிழகத்தை ஆளவில்லை. 2 கட்சிகளும் ஆண்ட கட்சிகள் தானே. தனியாக நிற்க தைரியம் உள்ளதா?
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இலவசங்கள், சினிமா, மதுவை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவை மூன்றையும் அழிப்போம். அதில் சினிமாவை நல்ல சினிமாவை வரவேற்போம். ஆனால் சினிமா மோகத்தை அழிப்போம்.

கேரளா, கர்நாடகம், தமிழகம் மூன்றும் சேர்ந்தது தான் திராவிடம் என்கிறார்கள். இந்த திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள், காவிரியில் இருந்து தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே? முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் திருவனந்தபுரத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே?
பா.ம.க.வில் இருப்பவர்கள், எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நல்லதுக்கு பாடுபட வேண்டும். பா.ம.க.வில் தலைமை பண்புகள், ஆளுமை பண்புகளை வளர்க்கும் விதத்தில் பயிற்சி கொடுத்து வருகிறோம். இந்தியாவில் எங்கும் கொடுக்காத பயிற்சி பா.ம.க.வில் கொடுக்கப்பட்டு வருகிறது.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்கு தான். டிசம்பர் 17ந் தேதி முக்கியமான நாள். டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம். அதில் பா.ம.க.வினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும். நானும் 2 திண்டுக்கல் பூட்டு வாங்கி வைத்துள்ளேன். போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: