Monday, December 17, 2012

மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை 'வெற்றிகரமாக' நடத்திய பாமக

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, ஜி.கே. மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனையில் ராமதாஸ் தலைமையில் மதுக்கடை ஒன்றுக்கு பூட்டு போட பாமகவினர் முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது பேசிய ராமதாஸ், அரசே மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
விழுப்புரத்தில் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் மதுக்கடைக்கு பூட்டு போட முயற்சித்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சேலத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் மதுக்கடைகளைப் பூட்ட முயன்றதால் கைதாகினர்.
முன்னெச்சரிக்கைக்கு எதிர்ப்பு
முன்னதாக கடந்த 2 நாட்களாக பாமகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் திருவண்ணாமலை அருகே நூக்காம்பாடி என்ற கிராமத்தில் மதுபானக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறது. இதில் கடைக்குள் இருந்த இரண்டு பெட்டிகள் எரிந்து நாசமாகின. டாஸ்மாக் கடை ஊழியர்கள் புகாரின் பேரில் திருவண்ணாமலை பாமக நிர்வாகி பெரியண்ணனை போலீசார் கைது செய்தனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: