Tuesday, December 25, 2012

தூத்துக்குடியில் மாணவி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பாமக போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தூத்துக்குடியில் மாணவி புனிதா பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி புனிதாவை, பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்த சம்பவத்தை அறிந்து துயரம் அடைந்தேன். மாணவியின் குடும்பத்துக்கு எனது ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனிதா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வரே கூறியுள்ள போதும், குற்றவாளி மீது கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான பிரிவில் கூட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடியே இந்த சம்பவத்துக்கு மூலக்காரணமாக இருந்துள்ளது. எனவே, தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: