Friday, February 3, 2012

சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

திருவண்ணாமலையில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த இராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.



அப்போது அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் ஆளும்கட்சி எதிர்கட்சி நாகரீகமாக நடந்துக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் நாக்கை கடிப்பது, பல்லை கடிப்பது, கை நீட்டி பேசுவது என சினிமாவில் பேசுவது போன்று அநாகரிகமாக சட்டமன்றத்தில் நடந்துக்கொள்வது அநாகரீகமானது.



இதனை தகுதியில்லாதவர்க்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது என அந்தம்மா பேசியுள்ளார். அதில் நாங்கள் உடன் படுகிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.



சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை விட எதிர்கட்சிகளுக்கு அதிகம் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். இப்போது தான் வந்துள்ளார்கள். இனி அதிகம் எதிர்கட்சி உறுப்பினாகள் பேச வாய்ப்பு தருவார்கள் நம்புகிறோம். வாய்ப்பு தர வேண்டும் என்றார்.



ஜெ சசிகலா மோதல் பற்றிய உங்களது கருத்து என்ற கேள்விக்கு, அதற்க்குள் நான் போக விரும்பவில்லை. அதை மக்கள் நேரடியாக பார்த்துக்கொண்டுள்ளார்கள் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: