Saturday, February 11, 2012

பாமக ஆட்சிக்கு வந்தால்...: அன்புமணி பேச்சு

தஞ்சை (வடக்கு) மாவட்ட பாமக சார்பில் கும்பகோணம் மகாமகக் குளம் மேல்கரையில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியது:


45 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சுரண்டி, தமிழர்களைக் குடிகாரர்களாகவும், சோம்பேறிகளாகவும் மாற்றி விட்டனர். இந்த திராவிட கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரிசி, டி.வி, மிக்ஸி, ஆடு, மாடு என இலவசமாக வழங்குகிறார்கள். இனி இலவசமாக மது பாட்டில்கள் தான் வழங்கவேண்டும். அதையும் வழங்குவார்கள்.


மாற்றத்தை மற்றவர்களால் கொடுக்க முடியாது. அவர்களால் நாடு கெட்டு போய் விட்டது. வித்தியாசமான மாற்றத்தை பாமக மட்டுமே தர முடியும். பாமக ஒரு வரைவு செயல் திட்டத்தை தயாரித்துள்ளது. அதில் 16 தலைப்புகளில் வேளாண்மை, கல்வி, தொழில் வளர்ச்சி, சமூகநீதி, சுகாதாரம் உள்ளிட்டவைகளில் வளர்ச்சியடைய பாடுபடுவோம்.


பாமக ஆட்சிக்கு வந்தால் இலவசப் பொருள்கள் கிடையாது. மாறாக அனைவருக்கும் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு அனைத்து இடுபொருட்கள் இவை தான் இலவசமாக வழங்கப்படும்.


தமிழக மக்களின் முன்னேற்றத்தை பாமக மட்டுமே கொண்டு வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும். யாரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இல்லை என்ற நிலைûயை ஏற்படுத்துவோம்.


மின்வெட்டு பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆட்சிக்கு வந்ததும் 2012 ல் என்றார். இப்போது அடுத்த ஆண்டு தீரும் என்கிறார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் :

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: