Monday, February 20, 2012

மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன, ஆனால் யாரும் கேட்பதில்லை-ராமதாஸ்

திருச்சி: மின்வெட்டை சரி செய்யாமல்,மக்களை திசை திருப்பும் வகையில் தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன. ஆனால் யாரும் அதை கேட்பதில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

திருச்சியில் மின்வெட்டைக் கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

மின்வெட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 3 மாதத்தில் மின்வெட்டை சரிசெய்வோம் என்று அதிமுக கூறியது. ஆனால் 8 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மின்வெட்டு நேரம் 8 மணி நேரம், 10 மணி நேரம் என அதிகரித்துள்ளது. மின்வெட்டை சரிசெய்யாமல் தம்முடன் இருந்தவர்களை கைது செய்து மக்களை திசைதிருப்புகின்றனர். எங்களிடம் மின்வெட்டை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. ஆனால் நாம் கூறினால் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: