Monday, February 20, 2012

முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: ராமதாஸ்

முதல்வர் கூடங்குளம் சென்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திருச்சியில் பாமகவின் புதிய அரசில் புதிய நம்பிக்கை என்ற நூலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக அரசு அங்கு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று அவர்கள் சொல்லத் தேவையில்லை. அதனை அப்துல் கலாம் சொல்லிவிட்டார்.


அந்த நிபுணர் குழு மக்களையும், எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும். அச்சத்தைப் போக்க வேண்டும். தமிழக அரசின் இந்நடவடிக்கை சரியானது அல்ல. முதல்வர் அங்கு நேரடியாக சென்று அந்த மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று கூறினார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: