Tuesday, February 14, 2012

பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 10 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,



இன்றைக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களிடம் அரசியல் ஆர்வம் குறைகிறது. அரசியலில் நல்லவர்கள் குறைந்து வருகிறார்கள். தீயவர்கள் கூடாரமாக கூடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 45 வருடமாக ஆண்ட திராவிட கட்சிகள் சீழ்த்துவிட்டன. அதை மீட்டெடுக்க நாங்கள் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். மம்தா பானர்ஜி மத்திய அரசை மிரட்டுவதைப்போல, திமுகவும் மத்திய அரசை மிரட்டி இதனை செய்ய வேண்டும்.



கூடங்குளம் அணுஉலை பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசு குழு நியமித்துள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ள சீனிவாசனை நீக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த புதிய மேயர் பதவியேற்று ஒரு மாதம் ஆகியும் எந்த பணியும் நடக்கவில்லை. மதுரை மாநகராட்சி கமிஷனர் பதவியும் நிரப்பப்படவில்லை.



சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஜான்பாண்டியன் கட்சியினர் போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம். சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்காது.



வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலிலும் திராவிடம் பெயர் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அந்தக் கட்சிகளுடன் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளை ஒதுக்விட்டு தமிழ்நாட்டுடக்கு புதிய எதிர்காலத்தை கொடுப்போம்.



வரும் பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 10 தொகுதிகளில் சாதாரணமாக வெற்றி பெறுவோம். மற்ற இடங்களில் சமூக கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுவோம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சஸ்பெண்ட் செய்தது தவறு. எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சி மதிக்க வேண்டும். சட்டசபையை சினிமா ஸ்டூடியோ போல விஜயகாந்த் மாற்றக் கூடாது.



கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேமுதிக வெற்றி பெற்றது. ஆனால் தனித்து நின்றிருந்தால் ஒருஇடத்தில் கூட தேமுதிக வெற்றிப்பெற்றிருக்க முடியாது. ஆளும்கட்சிக்கு சமச்சீர் கல்வியும், மின்சார தட்டுப்பாடும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



முதல் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் சிலர் ஒதுக்கி வைக்கப்பட்டு, பிறகு கைது செய்யப்படுகிறார்கள். என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: