Tuesday, February 21, 2012

ருபர்களுக்கு வகுப்பு எடுத்த ராமதாஸ்!

திருச்சி சங்கம் ஹோட்டலில் புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற புத்தகத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.



அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு இந்த புத்தகத்தை கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டுள்ளேன்.

சென்னை நிருபர்கள் மிகவும் மோசம். சின்ன சின்ன பசங்க நிருபர் என்று வந்துவிடுகிறார்கள். தினந்தோறும் செய்தித்தாள்களை படிக்காமல் கேள்வி கேட்கிறார்கள். அரசியலைப் பற்றி முழுமையாக தெரியாமல், நிருபராக இருக்கிறார்கள்.



ஆனால் திருச்சியில் அப்படி இல்லை. ரொம்ப சீனியர்ஸ் இருக்கிறீர்கள். முழு அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறீர்கள். முழு பத்திரிகையாளர்களாகவே கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.



பின்னர் அனைவரும் முதல் பக்கத்தை திருப்புங்கள் என்றார். அதில் இரண்டு பகுதிகளாக இந்தப் புக்கத்தை பிரித்திருக்கிறோம். முதல் பகுதியில் முன்னுரையில் இதுவரை ஆண்ட திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு செய்த துரோகங்கள், தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நேர்ந்த கேடுகள், தமிழகத்தை தலைகுனிய வைத்த திராவிட கட்சிகளின் ஊழல்கள் ஆகியவற்றை புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கிறோம்.



இரண்டாவது பாகத்தில் பாமகவின் கொள்ளை, இனி அரசியலில் புதிய நம்பிக்கை, புதிய அரசியல் செயல்திட்டம் என்று 16 பாகங்களாக பிரித்து தனித்தனியாக கொடுத்திருக்கிறேன். இது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்றார்.



பின்னர் புத்தகத்தின் கடைசிப் பக்கம் திருப்புங்கள் என்ற ராமதாஸ், இந்த புத்தகத்தை பத்திரிக்கையாளர்களுக்காகவே கொடுக்கிறோம். நீங்கள் சார்ந்த பத்திரிக்கை நிறுவனங்களும், ஊடக நிறுவனங்களும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு அரசியலைப் பற்றிய ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதனை இந்த புத்தகத்தில் கடைசிப் பக்கத்தில் கருத்து கேட்பு படிவம் என்ற பகுதி இருக்கிறது. உங்களின் கருத்துக்களை அதில் முழுமையாக எழுதி அனுப்பவும். தொலைபேசியிலோ அல்லது நேரிடையாகவோ என்னிடம் சொல்லலாம். ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: