Sunday, March 8, 2015
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம் இலவசம்: கரூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம் ஆகியற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குவோம் என கரூரில் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தெரிவித்தார்.
இன்று கரூர் வந்த பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
சேலத்தில் நடந்த பா.ம.க. பொது குழுவில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறேன். ஊழல், மது ஒழிப்பு இரண்டும் தான் எங்களின் முக்கிய கொள்கை. பா.ம.க. ஆட்சிக்கு வந்து நான் முதல்வரானால் நான் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்குத்தான்.
கல்வி, வேலை வாய்ப்பு, சுய தொழில், சுகாதாரம், விவசாயம் ஆகிய 5 துறைகளின் வளர்ச்சிக்கு பா.ம.க. முக்கியத்துவம் கொடுக்கும். இதில் கல்வி, உலக தரமான சுகாதாரம் ஆகியன தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத பிற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். தமிழகத்தில் இந்த கட்சிகளுக்கு எதிராக வெற்றிடம் உள்ளது. அதை பா.ம.க. நிரப்பும். தமிழக மீனவர்கள் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறிய கருத்துக்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ம.க. நிர்வாகிகள் ஜி.கே.மணி, பாஸ்கரன், நகர செயலாளர் ராக்கி முருகேசன் ஆகியோர் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment