Wednesday, March 4, 2015

பங்காரு அடிகளாரை திடீரென நேரில் சந்தித்த டாக்டர் ராமதாஸ்... ஏன்?

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 75-வது பிறந்தநாள் பவள விழாவாக மேல்மருவத்தூரில் செவ்வாடை பக்தர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதை விட முக்கியமாக பங்காரு அடிகளாரை யாரும் எதிர்பாராத வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதுதான்.பங்காரு அடிகளாரை இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவர் டாக்டர் ராமதாஸ். எனவே அவரே நேரில் வந்து சந்தித்தது அரசியல் ரீதியாகவும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.கடந்த 28ஆம் தேதி தொடங்கிய பிறந்தநாள் விழாவின் முதல் நாள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த ஆன்மிக ஜோதிகளுக்கு இயக்கத்தின் துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் வரவேற்பு கொடுத்து அந்த ஜோதிகள் மூலம் கலச விளக்கு வேள்வி பூஜைகளை தொடங்கி வைத்தார்
ராமதாஸ் திடீர் நெருக்கம் இந்த நிலையில் பாமக, பங்காரு அடிகளாருடன் நெருங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியும் இந்த ஆலயத்தின் வளர்ச்சியைப் போல்தான் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது. வரும் சட்ட மன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ராமதாஸ் களத்தில் இறக்கியுள்ளார். அதே சமயம் தனது சமூகத்தவரான பங்காரு அடிகளார் வசம் உள்ள பக்தர்களின் வாக்குகளைக் கவர பாகம முயல்கிறதோ என்ற கேள்வி ராமதாஸ் - பங்காரு அடிகளார் சந்திப்பு மூலம் எழுந்துள்ளது. பிறந்தநாளுக்கு வாழ்த்து 9/11 பிறந்தநாளுக்கு வாழ்த்து பங்காரு அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை முடித்த கையோடு திடீர் என ராமதாஸ் பங்காரு அடிகளர் இல்லத்திற்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி, அவருக்கு பொன்னாடையும் அணிவித்து திரும்பியுள்ளார். இந்த சந்திப்பை பங்காரு அடிகளாரே கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அரசியல் சாயமா? 10/11 அரசியல் சாயமா? அரசியல் கலப்பு இல்லாத ஒரு பக்தியாளர்களின் சங்கமமாக மட்டுமே இருந்து வரும் "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம்" அரசியல் சாயம் பூசப்பட்டு விடுமோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: