Sunday, March 8, 2015

முதலமைச்சர் பதவி என்பது சாதாரண பதவி தான்: அன்புமணி ராமதாஸ்

 

ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு பெரிய அக்ரகாரத்தில் உள்ள ரவி மகாலில் நடந்தது. இக்கூட்டத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,  ‘’முதலமைச்சர் பதவி என்பது சாதாரண பதவி தான். அந்த பதவியை இன்று திராவிட கட்சிகள் கடவுளுக்கு நிகரான பதவி போன்று நினைக்கிறார்கள்.

முதலமைச்சர் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான பதவி தான். நான் முதலமைச்சரானால் என்னை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என்று கூற மாட்டேன். வழக்கம் போல டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்று அழைத்தாலே போதும்.

தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும், அரசியல் நாகரீகம் மாற்றம் பெற வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் நிகழ்ச்சிகளை பார்த்தால் டெல்லியில் உள்ளவர்கள் கேவலமாக பார்க்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். திராவிட கலாசாரம் ஒழிய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு ஆட்சியை முதல் அமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பது அல்ல. தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதுதான். இந்த மாற்றத்தை கொண்டுவர ஆட்சி அதிகாரம் வேண்டும். அதற்காகவே முதலமைச்சர் பதவி வேண்டும் என்கிறோம்.

மக்களுக்கு சேவை செய்ய ஒரே ஒரு முறை அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள். என்று உங்களிடம் கேட்கிறேன். இந்த ஒருமுறை மட்டும் தான் வாக்கு கேட்பேன். அடுத்த முறை மக்களாகவே ஒட்டு போட்டு விடுவார்கள்.

அன்புமணியை ஒரு கட்சியின் வேட்பாளராக பார்க்காதீர்கள். பொது வேட்பாளராக பாருங்கள்’’என்று தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: