சென்னை: எப்பவுமே ஆளுங்கட்சிக்கு மார்க் போட்டு பழக்கப்பட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காரணம் என்னவெனில் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி நிதிநிலை அறிக்கையை தயாரித்தது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய செயல் என்பதால் அவரை தகுதிநீக்கம் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளார் ராமதாஸ்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக சட்டப் பேரவையில் 2015-16 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமது உரையில் மொத்தம் 151 முறை ‘அம்மா' புகழ் பாடி தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி கொண்டார். அதையும் தாண்டி அவர் கூறிய சில கருத்துக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு சமமானவையாகும்.அம்மா வழிகாட்டினாரா?நிதிநிலை அறிக்கையை முழுமையாக வாசித்து முடித்த பன்னீர்செல்வம், தமது உரையின் முடிவில், ‘‘போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.ஜெயலலிதா மேற்பார்வையில்இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தான் அமைக்கப்பட்டுள்ளது என்றால், நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்குத் தேவையான அரசின் கோப்புகளும், புள்ளி விவரங்களும் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன; அவற்றை ஆய்வு செய்த ஜெயலலிதா நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இடம் பெற வேண்டும்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்; அதன் அடிப்படையில் தான் இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தான் பொருளாகும்.அரசியல் அமைப்புச் சட்டவிதிஇது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். தமிழ்நாட்டின் முதல்வராகவும், அமைச்சர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (3) பிரிவின்படி பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் ஏற்க வேண்டியது கட்டாயமாகும். இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆளுநரின் முன்னிலையில்,‘‘தமிழ்நாட்டு மாநில அமைச்சர் என்ற முறையில் எனக்குத் தெரியவரும் அல்லது எனது பரிசீலனைக்காக வரும் எந்த விஷயத்தையும், அமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளை ஆற்றுவதற்காகத் தவிர வேறு எதற்காகவும் யாருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்க மாட்டேன் என்று கடவுளின் பெயரால் (அல்லது உளமாற) உறுதியேற்கிறேன்'' என உறுதிமொழி ஏற்கிறார்கள்.தகுதியை இழந்துவிட்டனர்இவ்வாறு முதல்வர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் தாம் கையாள வேண்டிய கோப்புகளை ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு சென்று, அவற்றை ஆய்வு செய்து அவர் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பதன் மூலம் ரகசியக் காப்பு உறுதி மொழியையும், இந்திய அரசியலமைப்புச் சட்டவிதிகளையும் பன்னீர்செல்வம் மீறிவிட்டார்; முதல்வர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.ஜெயலலிதா உடன் சந்திப்புஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு, தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை போயஸ் தோட்ட இல்லத்தில் பல முறை சந்தித்து பேசியுள்ளனர்.ஊழல் குற்றவாளிமுதல்வரும், அமைச்சர்களும் அதிமுகவின் நிர்வாகிகள் என்ற முறையில் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை சந்தித்து பேசுவதை குறை கூற முடியாது. ஆனால், தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் எந்த அடிப்படையில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை சந்தித்து அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்? இதை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எப்படி அனுமதிக்கிறார்.சட்ட மீறல்இதற்கெல்லாம் மேலாக தமிழக அரசின் முக்கியக் கோப்புகள் அனைத்தும் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரது ஒப்புதலுக்குப் பிறகு தான் அவற்றில் முதல்வர் பன்னீர்செல்வம் கையெழுத்திடுவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையென்றால் இதுவும் அப்பட்டமான அரசியலமைப்பு சட்ட விதி மீறல் ஆகும்.நல்ல முதல்வரா?ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் உடனடியாக அரசு நிர்வாகத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டால், அந்த நிர்வாகம் ஊழல் மலிந்ததாகத் தான் இருக்கும் என்ற என்ற அடிப்படையில் தான் இப்படி ஒரு பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஊழல் குற்றவாளியில் வழிகாட்டுதலை பின்பற்றுவது மட்டுமல்ல... அவ்வாறு கூறுவதே தவறு தான். ஊழல்வாதியை பின்பற்றுபவர் எப்படி நல்ல முதல்வர் இருக்க முடியும்?நீதித்துறையில் தலையீடுநிதிநிலை அறிக்கை உரையின் இன்னொரு இடத்தில்,‘‘மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை'' என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.கண்டிக்கத்தக்கதுசொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விடுதலை ஆவார் என்ற பொருளில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசுவது நீதித்துறையில் செய்யும் தலையீடு ஆகும். இது கண்டிக்கத்தக்கது.பதவி நீக்கம் செய்யுங்கள்இந்திய நிர்வாக முறையின் புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான். அந்த சட்டத்தையும், அதன் அடிப்படையில் ஆளுநர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியையும் ஓ.பன்னீர்செல்வம் மீறிவிட்ட நிலையில் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது முறையல்ல. எனவே, அவரையும், அவரது அமைச்சரவையையும் பதவி நீக்க மாநில ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
Saturday, March 28, 2015
செல்லாது... செல்லாது... ஓ.பி.எஸ் முதல்வர் பதவியில் நீடிப்பது செல்லாது..: டாக்டர் ராமதாஸ்
Friday, March 27, 2015
எதிர்க்கட்சியினரை பழிவாங்கத் துடிக்கும் அதிமுக அரசின் அணுகுமுறையை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அன்புமணி
மக்களுக்கு நன்மை செய்வதை விட எதிர்க்கட்சியினரை பழிவாங்கத் துடிக்கும் அரசின் எதிர்மறை அணுகுமுறையை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தாக்கியதாக என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சிவ்கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டை இன்று அறிமுக நிலையிலேயே தள்ளுபடி செய்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக என் மீது யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.
ஆனால், அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, சுங்கச்சாவடி ஊழியர் சந்தோஷ்குமார் என்பவரின் வீட்டிற்கு காவல்துறையினர் நள்ளிரவில் சென்று புகார் மனுவை எழுதி வாங்கியுள்ளனர்.
நானும், எனக்கு முன் வந்த மகிழுந்தில் இருந்தவர்களும் சுங்கச்சாவடியை அமைதியாக கடந்ததாக அவர் புகார் மனுவில் கூறியிருந்த போதிலும், எனது தூண்டுதலின் பேரில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய் வழக்கை பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி, என்னை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான காவல்துறையினர் எனது வீட்டை பல மணி நேரம் முற்றுகையிட்டனர். எனினும், விடுமுறை நாளில் உயர்நீதிமன்றத்தை அணுகி முன்பினை பெற்றேன்.
அதன்பிறகும், செய்யாத குற்றத்திற்காக விசாரணை என்ற பெயரில் என்னை இரு நாட்களுக்கு உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து 200-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு அலைக்கழித்து கொடுமைப்படுத்தினார்கள்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்குதல் தொடர்பான முழு உண்மைகளும் காவல்துறைக்கு நன்றாக தெரியும் என்ற போதிலும், இவ்வழக்கில் என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பொய்யான புகார்களை சுமத்தினார்கள்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக காவல்துறையினரால் பட்டியலிடப்பட்ட 3 பேரில் ஒருவர் கூட இத்தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்றோ, நான் தூண்டியதாகவோ, நான் உடந்தையாக இருந்ததாகவோ எந்த இடத்திலும் கூறவில்லை.
ஆனால், நான் தான் அனைத்துக்கும் காரணம் என்பது போல காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் என் மீதான குற்றச்சாற்றுக்கள் பொய்யானவை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, காவல்துறையைத் தூண்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இப்போது உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையும், நீதியும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நான் குற்றமற்றவன் என்பதும், என் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. என் மீது மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு தெளித்த கறை அகற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
என் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, இந்த விஷயத்தில் தமிழக அரசு கடைபிடித்த அணுகுமுறை தான் மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழகத்தின் நலனை பாதிக்கும் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு 5 மாதங்களாக விசாரணைக்கு வராமல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி 19.05.2014 ஆம் நாள் அரசு தொடர்ந்த வழக்கு 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளே நடத்தப்பட வில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 4 பேர் என 7 தமிழர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் நிலையில், அவர்களின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஓராண்டுக்கும் மேல் கிடப்பில் கிடப்பதால் அவர்களின் சிறை வாசம் தொடருகிறது. இந்த வழக்குகளை விரைவு படுத்தி தமிழகத்திற்கு நன்மை செய்ய அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், செய்யாத தவறுக்காக என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்த ஒரு மாதத்திற்குள்ளாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறதென்றால் அரசியல் எதிரிகளை பழி வாங்குவதில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை உணரலாம்.
மக்களுக்கு நன்மை செய்வதை விட எதிர்க்கட்சியினரை பழிவாங்கத் துடிக்கும் அரசின் எதிர்மறை அணுகுமுறையை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார்.
Wednesday, March 25, 2015
தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு-செலவு காகித அறிக்கை: பட்ஜெட் குறித்து ராமதாஸ் கருத்து
Sunday, March 22, 2015
தமிழக மக்களை பண அடிமையாக்கியது ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் தான்: ராமதாஸ்
சென்னை: ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் பணத்துக்கு அடிமையாக்கிய சிறுமை தமிழகத்தை ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் தான் சேரும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தேர்தல் சீர்திருத்தம் குறித்து நேர்காணல் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதும், வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதும் உண்மை தான் என்று கூறியிருக்கிறார். ஆனால், இதை சட்டத்தால் திருத்த முடியாது என்று அவர் கைவிரித்திருக்கிறார்.இந்தியத் தேர்தல் முறையை பணபலமும், வாக்குக்கு பணம் தரும் கலாச்சாரமும் எந்த அளவுக்கு சீரழித்திருக்கின்றன என்பது குறித்த எச்.எஸ். பிரம்மாவின் புரிதல் பாராட்டத்தக்கது. ‘‘இன்றைய சூழலில் தேர்தலில் பணபலம் முக்கியப் பங்காற்றுகிறது. இக்கால தேர்தல்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் எதிர்கொள்ளப்படுவதில்லை; இதில் பணம், வணிகம் ஆகியவையும் சம்பந்தப்பட்டுள்ளன. பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது'' என்ற உண்மையை பிரம்மா பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார்.அதேநேரத்தில், இதற்கான சரியானத் தீர்வை அவரால் சொல்ல முடியவில்லை.‘‘தேர்தலில் பணபலத்தைத் தடுப்பதற்காக எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. சட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை. மக்கள் தங்களின் நலனுக்காக நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவையெல்லாம் ஒரேநாளில் சாத்தியமாகி விடாது'' என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகத்தை பீடித்துள்ள மிக மோசமான நோயை துல்லியமாக கண்டு பிடித்துள்ள பிரம்மா, அதை குணப்படுத்துவதற்கான சரியான சிகிச்சையை அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது; ஆணையரின் இந்த நிலைப்பாடு கவலையளிக்கிறது.பண பலத்தைத் தடுப்பதற்கான கருவிகள் ஆணையத்திடம் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கூறும் ஆணையர், இன்னொரு சந்தர்ப்பத்தில் பண பலத்தை தடுக்க முடியாது என்று கூறுவது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும். இவ்விஷயத்தில் மக்கள் தாங்களாகத் தான் திருந்த வேண்டும் என்று மக்கள் மீது பழியை போடுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மக்கள் சரியானவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் தான் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக ஊழல் மூலம் தாங்கள் சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை வாக்காளர்களுக்கு வீசி அவர்களைக் கெடுத்துவிட்டனர். ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் பணத்துக்கு அடிமையாக்கிய சிறுமை தமிழகத்தை ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் தான் சேரும்.தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் இந்த கலாச்சாரம் தழைத்தோங்கியிருக்கிறது. வாக்குகளுக்கு பொதுத் தேர்தல் என்றால் ஒரு தொகை, இடைத் தேர்தல் என்றால் ஒரு தொகை என வாக்காளர்களுக்கு வாரி இறைத்து அவர்களை இந்த மோசமான கலாச்சாரத்திற்கு அடிமையாக்கும் பணியை ஊழல் கட்சிகள் போட்டிப் போட்டு செய்து வரும் வேளையில், மக்கள் அவர்களாகவே மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதும், அலைகள் ஓய்ந்த பின் கடலில் இறங்கி குளிக்கலாம் என காத்திருப்பதும் ஒன்றுதான்.தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களின் முடிவையும் பணம் தான் தீர்மானித்தது. 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்குக்கு பணம் தருவதற்காகவே ஆளுங்கட்சியால் ரூ. 1600 கோடி செலவிடப்பட்டதாக ஒரு கணக்கு கூறுகிறது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பண வினியோகத்திற்கு உதவி செய்யத் தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததே தவிர, பணபலத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, ‘‘வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது உண்மை தான்; ஆனால், அதை எங்களால் தடுக்க முடியவில்லை'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அவலமும் நடந்தது.தேர்தலில் பணபலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும்போது இருக்கும் சட்டத்தை தீவிரமாக பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டத்தைக் கொண்டு வந்தும் நடவடிக்கை எடுப்பது தான் ஆணையத்தின் கடமையாகும். தேர்தல் நடைபெறும் தொகுதிக்குட்பட்ட எந்த இடத்தில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டாலும் அந்தத் தொகுதியின் தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது.அதுமட்டுமின்றி, ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றது தெரிய வந்தால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சட்டத்தின் இந்த பிரிவுகளை பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டங்களைக் கொண்டு வந்தும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு ஆணையம் முடிவு கட்ட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Saturday, March 21, 2015
ஓட்டுக்கு பணம்: தேர்தல் ஆணையம் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது!: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தேர்தல் சீர்திருத்தம் குறித்து நேர்காணல் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதும், வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதும் உண்மை தான் என்று கூறியிருக்கிறார். ஆனால், இதை சட்டத்தால் திருத்த முடியாது என்று அவர் கைவிரித்திருக்கிறார்.
இந்தியத் தேர்தல் முறையை பணபலமும், வாக்குக்கு பணம் தரும் கலாச்சாரமும் எந்த அளவுக்கு சீரழித்திருக்கின்றன என்பது குறித்த எச்.எஸ். பிரம்மாவின் புரிதல் பாராட்டத்தக்கது. ‘‘இன்றைய சூழலில் தேர்தலில் பணபலம் முக்கியப் பங்காற்றுகிறது. இக்கால தேர்தல்கள் அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் மட்டும் எதிர்கொள்ளப்படுவதில்லை; இதில் பணம், வணிகம் ஆகியவையும் சம்பந்தப் பட்டுள்ளன. பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது’’ என்ற உண்மையை பிரம்மா பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில், இதற்கான சரியானத் தீர்வை அவரால் சொல்ல முடியவில்லை.‘‘தேர்தலில் பணபலத்தைத் தடுப்பதற்காக எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது. சட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை. மக்கள் தங்களின் நலனுக்காக நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இவையெல்லாம் ஒரேநாளில் சாத்தியமாகி விடாது’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஜனநாயகத்தை பீடித்துள்ள மிக மோசமான நோயை துல்லியமாக கண்டு பிடித்துள்ள பிரம்மா, அதை குணப்படுத்துவதற்கான சரியான சிகிச்சையை அளிக்க முன்வராதது துரதிருஷ்டவசமானது; ஆணையரின் இந்த நிலைப்பாடு கவலையளிக்கிறது.
பண பலத்தைத் தடுப்பதற்கான கருவிகள் ஆணையத்திடம் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் கூறும் ஆணையர், இன்னொரு சந்தர்ப்பத்தில் பண பலத்தை தடுக்க முடியாது என்று கூறுவது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும். இவ்விஷயத்தில் மக்கள் தாங்களாகத் தான் திருந்த வேண்டும் என்று மக்கள் மீது பழியை போடுவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மக்கள் சரியானவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் தான் தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதற்காக ஊழல் மூலம் தாங்கள் சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை வாக்காளர்களுக்கு வீசி அவர்களைக் கெடுத்து விட்டனர்.
ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் பணத்துக்கு அடிமையாக்கிய சிறுமை தமிழகத்தை ஆண்ட கட்சியையும், ஆளும் கட்சியையும் தான் சேரும். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தான் இந்த கலாச்சாரம் தழைத்தோங்கியிருக்கிறது. வாக்குகளுக்கு பொதுத் தேர்தல் என்றால் ஒரு தொகை, இடைத் தேர்தல் என்றால் ஒரு தொகை என வாக்காளர்களுக்கு வாரி இறைத்து அவர்களை இந்த மோசமான கலாச்சாரத்திற்கு அடிமையாக்கும் பணியை ஊழல் கட்சிகள் போட்டிப் போட்டு செய்து வரும் வேளையில், மக்கள் அவர்களாகவே மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பதும், அலைகள் ஓய்ந்த பின் கடலில் இறங்கி குளிக்கலாம் என காத்திருப்பதும் ஒன்றுதான்.
தமிழ்நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களின் முடிவையும் பணம் தான் தீர்மானித்தது. 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் வாக்குக்கு பணம் தருவதற்காகவே ஆளுங்கட்சியால் ரூ. 1600 கோடி செலவிடப்பட்டதாக ஒரு கணக்கு கூறுகிறது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பண வினியோகத்திற்கு உதவி செய்யத் தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததே தவிர, பணபலத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, ‘‘வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது உண்மை தான்; ஆனால், அதை எங்களால் தடுக்க முடியவில்லை’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த அவலமும் நடந்தது.
தேர்தலில் பணபலம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும்போது இருக்கும் சட்டத்தை தீவிரமாக பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டத்தைக் கொண்டு வந்தும் நடவடிக்கை எடுப்பது தான் ஆணையத்தின் கடமையாகும்.
தேர்தல் நடைபெறும் தொகுதிக்குட்பட்ட எந்த இடத்தில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டாலும் அந்தத் தொகுதியின் தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றது தெரியவந்தால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சட்டத்தின் இந்த பிரிவுகளை பயன்படுத்தியும், தேவையான புதிய சட்டங்களைக் கொண்டு வந்தும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு ஆணையம் முடிவு கட்ட வேண்டும்.’’
Friday, March 20, 2015
சுகாதார அதிகாரி தற்கொலைக்கு அமைச்சரின் மிரட்டல் காரணமா?: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழ்நாடு மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனராகவும், மாநில காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றி வந்த மருத்துவர் அறிவொளியின் உடல் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சென்னை மெரினாவில் கரை ஒதுங்கியது. புற்றுநோயால் அவர் பாதிக்கப் பட்டிருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தொடக்கத்தில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகும் தகவல்கள் அவரது மரணத்தில் ஐயத்தை எழுப்புகின்றன. மருத்துவர் அறிவொளி கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 5 பணிகளிலும், ஏற்கனவே இருந்த பணிகளிலும் 687 பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன. இதற்கான ஆள் தேர்வுகள் முறையாக நடைபெற வேண்டும் என்று விரும்பிய அறிவொளி, மாவட்ட வாரியாக பணியாளர்களை நியமிக்க ஊட்கங்களில் விளம்பரம் கொடுத்தார். இவரது அறிவுரைப்படி தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் முறைப்படி நேர்காணல் நடத்தி 3 பணியாளர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கினார்.
இந்த பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயித்து மொத்தம் ரூ.20 கோடி ஊழல் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் முறையாக நேர்காணல் நடத்தி பணியாளர்களை நியமித்ததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், அந்த பணி நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்ததுடன், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ததாகவும் தெரிகிறது. காசநோய் திட்டத்திற்கான ஆள் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, அனைத்து பணியிடங்களும் மாநில அளவில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வு மற்றும் நேர்காணலில் முறைகேடு செய்து பணம் தந்தவர்களுக்கு வேலை வழங்குவது தான் திட்டம் என்று கூறப்படுகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அறிவொளி, இப்பணிக்கு அதிக அனுபவம் தேவை என்பதால், ஏற்கனவே இத்திட்டத்தில் களப்பணியாளர்களாக இருப்பவர்களில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களை கலந்தாய்வு முறையில் நியமிக்கலாம் & மீதமுள்ள இடங்களை மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் முறைப்படி நியமிக்கலாம் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்காத மேலிடம் அறிவொளியை கடுமையாக மிரட்டியதாகவும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவருக்கு நெருக்கமானோர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட அதே காலக்கட்டத்தில் அறிவொளியின் தற்கொலையும் நடந்திருப்பதால் இக்குற்றச்சாற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியவில்லை.
அறிவொளியின் மரணத்திற்குப் பிறகு கடந்த மாத இறுதியில் காசநோய் திட்ட பணியாளர் பணிக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவடைந்த பிறகு அதில் பங்கேற்றவர்களை தொடர்பு கொள்ளும் சிலர், பணம் கொடுத்தால் வேலை உறுதி என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போது இக்குற்றச்சாற்று மேலும் வலுவடைகிறது. ரூ.20 கோடி ஊழல் செய்வதற்கு அறிவொளி தடையாக இருந்ததால் ஆத்திரமடைந்த மேலிடம், அவரை மிரட்டியிருக்கலாம்; அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுவதை நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஊழலுக்குத் தடையாக இருக்கும் அதிகாரிகள் எல்லாம் அமைச்சர்களின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும். இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் எவருமே இருக்க மாட்டார்கள்; ஊழல் அமைச்சர்களும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளும் மட்டும் தான் கோலோச்சுவார்கள் என்ற அவமானகரமான சூழல் ஏற்பட்டு விடும்.
காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் அறிவொளியின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை விளக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வசதியாக சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.’’
பெண் நீதிபதி மீது தாக்குதல்: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மகிழுந்தில் சென்ற பெண் நீதிபதியை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் நீதிபதியும், அவரது மகிழுந்து ஓட்டுனரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீதிபதி மீதான இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
நீதிபதி மீதான தாக்குதல் எதேச்சையாக நடந்த ஒன்றாகத் தெரியவில்லை; திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் தோன்றுகிறது. நீதிபதியின் மகிழுந்தை மறித்த மர்ம கும்பல், ‘‘இது நீதிபதியின் மகிழுந்தா?’’ என்று கேட்டு உறுதி செய்து கொண்டு தான் தாக்கியுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களில் ஒன்றான நீதித்துறையின் பிரதிநிதி மீது துணிச்சலாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவுகிறது. கடந்த மாதம் இராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பிரகாசம் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிக்கும் காயம் ஏற்பட்டது. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை,‘‘ இத்தாக்குதல் நீதித்துறை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.
தமிழகத்தில் சட்டம்&ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதையே இது காட்டுகிறது’’ என அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வாடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கும், ஜெயலலிதா அரசுக்கும் எதிராக தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது, நீதிபதியின் மருமகன் மீது கஞ்சாவழக்கு பதிவு செய்யப்பட்டது, சொத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை சனியன், எருமை என்று விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியது போன்றவை தான் அ.தி.மு.க. ஆட்சியின் அடையாளங்களாக உள்ளன.
சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்ததால் தான் நீதிபதிகள் மீதே தாக்குதல் நடத்தப்படும் சூழல் உருவாகி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 7805 படுகொலைகள், 79,305 கொள்ளைகள், 4697 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, இதுகுறித்த புள்ளிவிவரங்களை காவல்துறை இணையதளத்திலிருந்து அகற்றி, உண்மையை மூடி மறைக்கப்பார்க்கிறது. இந்தப் போக்கை கைவிட்டு குற்றங்களைக் குறைக்கவும், நீதிபதியை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, நீதிபதிகள் விஷயத்தில் இன்னொரு உண்மையை தமிழக அரசு உணர வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்கு விசாரணையை நடத்துவார்கள். இதனால் இவர்கள் வழக்கறிஞர்களை மட்டும் தான் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நிலைமை அப்படியல்ல. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அவர்கள் நேரடியாக விசாரிக்க வேண்டியிருக்கும். அப்போது குற்றவாளிகளால் பல நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கீழமை நீதிபதிகளுக்கு பல முனைகளிலிருந்து அழுத்தங்கள் தரப்படுகின்றன. அந்த அழுத்தத்திற்கு பணியாத நீதிபதிகளுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் பாதுகாப்பின்மை காரணமாக கீழமை நீதிபதிகள் சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று கீழமை நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
Thursday, March 19, 2015
தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
''தரணியில் வளர்ந்த தமிழ் கணினியிலும் வளருவதற்கு தமிழ் ஒருங்குறியை (Tamil-Unicode) வளர்த்தெடுக்க வேண்டியது இன்றியமையாதது என்பதால், அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழறிஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழுடன் சற்றும் தொடர்பில்லாத சிலர் தமிழ் ஒருங்குறியை சீரமைப்பதாகக் கூறிக் கொண்டு சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் ஒருங்குறியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை என்றால் அது தமிழ் மொழியிலுள்ள 247 எழுத்துக்களையும் ஒருங்குறியில் சேர்ப்பதாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தனித்தமிழ் பயன்பாட்டாளர்களால் ஏற்கப்படாத 5 கிரந்த எழுத்துக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு தமிழ் ஒருங்குறியில் திணிக்கப்பட்டன. அப்போது இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதை தடுக்க முடியாமல் போய்விட்டது.
அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டில் 26 கிரந்த எழுத்துக்களைத் திணிக்க சதி நடைபெற்றது. ஆனால், இதற்கு எதிராக தமிழறிஞர்கள் கொதித்து எழுந்ததையடுத்து, இச்சிக்கலில் தலையிட்ட அப்போதைய தமிழக அரசு கிரந்த எழுத்துத் திணிப்பை தடுத்து நிறுத்தியது. எனினும், தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சக்திகள், இப்போது தமிழ்நாட்டின் தொன்மையான பின்னங்கள், வாணிபக் குறியீடுகள், அளவைகளின் குறியீடுகள் போன்ற 55 வகையான குறியீடுகளை பிழையாக தமிழ் ஒருங்குறியில் சேர்க்க முயன்று வருகின்றன. இதற்கான பரிந்துரைகள் ஒருங்குறி சேர்த்தியத்திற்கு (Unicode- consortium) அனுப்பப்பட்டிருக்கிறது.
இவை பழந்தமிழ் குறியீடுகள் என்பதால் இவை கண்டிப்பாக ஒருங்குறியில் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்த சக்திகள் சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. தொல்லியியல், நாணயவியல் மற்றும் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் இந்த பரிந்துரையை வழங்கியிருந்தால் அதை ஏற்பதில் எந்த தடையும் இல்லை. மாறாக இப்பரிந்துரைகளை வழங்கியவர்கள் சிறீரமண சர்மா என்ற சமஸ்கிருத ஆய்வாளரும், அவருடன் இணைந்து செயல்படும் சில தனியார் நிறுவனங்களும் ஆகும். இவர்களில் சிறீரமண சர்மா ஒருங்குறி சேர்த்தியத்துடன் தமக்கு உள்ள தொடர்பை பயன்படுத்திக் கொண்டு தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய 26 கிரந்த எழுத்துக்களை ஒருங்குறியில் சேர்க்கும் பரிந்துரையை செய்தவர் இவர் தான்.
வழக்கமாக இத்தகைய பரிந்துரைகளுக்கு தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் (Tamil Virtual University) ஏற்பளிப்பு வழங்கினால் தான் அவை ஒருங்குறி சேர்த்தியத்தால் ஏற்கப்படும். சிறீரமண சர்மாவின் பரிந்துரைகள் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு வந்த போது, வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து ஆராய்ந்து தான் ஏற்பளிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளியையே நீதிபதி ஆக்கியதைப் போல, சிறீரமண சர்மாவையே இதற்கான குழுவின் உறுப்பினராக்கி அவரது பரிந்துரைக்கு அவரையே ஏற்பளிப்பு வழங்க வைத்திருக்கிறது இணையக் கல்விக் கழகம். சிறீரமண சர்மா செய்தது குற்றம் என்றால், இணையக் கல்விக் கழகம் செய்தது பெருங்குற்றமாகும். இரண்டுமே கண்டிக்கத்தக்கவை.
இந்தப் பிழையான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளிட்ட தமிழின் பழைய ஆவணங்களைக் கணினிமயம் செய்யும்போது பல வரலாற்றுத் திரிபுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. இது கணினியுலகில் தமிழை வளர்ப்பதற்கு மாற்றாக வீழ்த்தி விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். எனவே, இந்த பிழையான ஒருங்குறிச் சேர்ப்புப் பரிந்துரையைத் திரும்பப் பெறவேண்டும்.
அத்துடன் தமிழ் ஒருங்குறியில் தனியார்களும் வெளிநாட்டினரும் தலையிட்டுக் குழப்பம் செய்வதை தடுக்கவும், தமிழ்மொழி சார்ந்த குறியீடுகளை, கல்வெட்டு, வரலாற்றுத்துறை, ஓலைச்சுவடி, நாணயவியல் அறிஞர்கள் என்ற அனைவரும் கூடி ஆய்வு செய்த பின்னரே ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பவும் தேவையான நெறிமுறைகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இதன் மூலம் கணினியுலகில் தமிழ் சீரழிவதைத் தடுத்து தமிழ் மரபின் தொன்மையை தமிழக அரசு காக்க வேண்டும்.
Wednesday, March 18, 2015
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இந்தியா முழுவதும் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று பத்தாவது நாளை எட்டியிருக்கிறது.
பல ஆண்டுகளாக பகுதி நேர தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணி நிலைப்பு செய்யப்பட்ட பிறகு தங்களுக்கான பணித் தன்மை மற்றும் ஊதிய விகிதம் பற்றி பரிந்துரைக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும்; அஞ்சல் துறையை பிரித்து தனி நிறுவனமாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பவை தான் அரசிடம் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் ஆகும்.
ஊரக பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்களுக்கான பணி 4 மணி நேரம் மட்டுமே என்ற போதிலும், எல்லா நாட்களிலும் இவர்கள் எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக இவர்களுக்கு தரப்படும் ஊதியம் மிகமிகக் குறைவு. 25 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்குக் கூட ரூ.8,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில் பணியாற்றும் கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்கள் தங்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோருவது மிகவும் நியாயமானதாகும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் மத்திய அரசுக்கு பெரிய செலவு ஏற்படாது.
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 ஆண்டுகளில் 3 முறை இவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அப்போதெல்லாம் இவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக வாக்குறுதி அளிக்கும் மத்திய அரசு, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு தங்களின் வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய இதுவரை 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி தல்வார் குழு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதை நிறைவேற்றவில்லை.
கிராமப்புற பகுதி நேர அஞ்சல் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களும் மற்ற அரசு ஊழியர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது. அதன்பின் 2014 ஆம் ஆண்டு அரசுக்கும், இவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி பதவி இழந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட நரேந்திரமோடி அரசு அந்த அறிவிப்பை செயல்படுத்த மறுத்துவிட்டது.
அஞ்சல் துறை தொழிலாளர்களின் போராட்டத்தால் கிராமப்புறங்களில் அஞ்சல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மூடப்பட்டிருக்கின்றன. பண விடைகள் (Money Orders) வழங்கப்படாததால் முதியோர் உதவித் தொகை பெறுவோரும், ஆதரவற்றோர் உதவித்தொகை பெறுவோரும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்த பாதிப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களில் தான் என்பதால் இதுகுறித்த செய்திகள் வெளியில் வரவில்லை; இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்த மத்திய அரசும் முன்வரவில்லை. அடிமட்ட தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காத இப்போக்கு கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர அஞ்சல் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதாலும், இவர்களின் போராட்டத்தால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து மத்திய அரசு பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.’’
Tuesday, March 17, 2015
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாசஸ்
பெட்ரோல், டீசல் மீதான விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு அவற்றின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச் 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே தோன்றுகிறது.
உலக சந்தையில் ஏறுமுகமாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரியத் தொடங்கியது. ஆனால், இந்த விலைவீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தயாராக இல்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை காரணம் காட்டி 2 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. கடைசியாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி இரவு பெட்ரோல் விலை வரிகளையும் சேர்த்து லிட்டருக்கு ரூ.3.46, டீசல் விலை ரூ.3.34 உயர்த்தப்பட்டன.
அதன்பின் மார்ச் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் நாள் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் பீப்பாய் 59.85 டாலர் (ரூ.3698) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 16 ஆம் தேதி நிலவரப்படி இது 55.56 டாலராக (ரூ.3419) குறைந்து விட்டது.
இதன்படி பார்த்தால் பெட்ரோல் விலை வரிகளையும் சேர்த்து லிட்டருக்கு 3.56 ரூபாயும், டீசல் விலை 3.42 ரூபாயும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலைக்குறைப்பை அறிவிக்கவில்லை. உலகசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது முழு அளவில் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அவையும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதியாகவே விலைகள் குறைக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்றவாறு கடந்த 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால் மட்டும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.141 கோடி கூடுதலாக லாபம் ஈட்டி வருகின்றன. விலை நிர்ணய நாளுக்கு ஒரு நாள் முன்பாக கச்சா எண்ணெய் விலை அதிகாரித்தால் கூட அதை நுகர்வோர் தலையில் சுமத்தும் எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதன் பயனை பொதுமக்களுக்கு வழங்க மறுப்பது ஏற்க முடியாதது; கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 84.77 டாலராக (ரூ.5209) இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.67.01 ஆகவும், டீசல் விலை ரூ.61.70 ஆகவும் இருந்தது. அதன்படி பார்த்தால் இப்போது கச்சா எண்ணெய் விலை 55.56 டாலராக(ரூ.3419) குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.43.98 ஆகவும், டீசல் விலை ரூ.40.47 ஆகவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதாலும், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்ட துணை போகும் நோக்குடன் விலை நிர்ணயத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செய்யும் குளறுபடிகளாலும் பெட்ரோலுக்கு 19.33 ரூபாயும், டீசலுக்கு 12.45 ரூபாயும் கூடுதல் விலை செலுத்த வேண்டியிருக்கிறது.
உலக அளவில் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இத்தகைய சூழலில் வெளிப்படைத் தன்மை இல்லாத விலை நிர்ணயக் கொள்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன், விலை நிர்ணய முறையையும் வெளிப்படையானதாக மாற்ற வேண்டும்.’’
மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி 23-ஆம் தேதி பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்
மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி 23-ஆம் தேதி
பா.ம.க. போராட்டம்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் காற்றில் பறக்கவிட்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகளை கடந்த நவம்பர் மாதத்தில் கோரிய கர்நாடக அரசு, இப்போது ஒப்பந்தப்புள்ளி தயாரிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்ததுடன், அதற்காக பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு தீவிரப் படுத்தி வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்ற மக்களவையில் 37 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க. இந்த பிரச்சினை குறித்து தனியாக தீர்மானம் கொண்டு வரவோ அல்லது தனி விவாதத்திற்கு முன்மொழியவோ முயற்சி மேற்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அண்மையில் மக்களவையில் இப்பிரச்சினை குறித்து பேசிய போது, அவரை பேசவிடாமல் தடுக்கும் நோக்குடன் கர்நாடக மக்களவை உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பினர். அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அன்புமணி இராமதாசு அவரது கருத்துக்களைப் பதிவு செய்தார். அப்போது, தமிழக நலன் சார்ந்த இந்தப் பிரச்சினையில் அவருக்காக குரல் கொடுக்கக்கூட அ.தி.மு.க. உறுப்பினர்கள் முன்வரவில்லை. இப்பிரச்சினையில் அதிமுகவின் அக்கறை இவ்வளவு தான்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாசனத்திற்காக காவிரி நீரை நம்பியுள்ள 14 மாவட்டங்கள் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, போதிய நீர் ஆதாரம் இல்லாத மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
புதிய அணை கட்டி முடிக்கப்பட்டால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும். எனவே, தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், எதிர்கால அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு இப்பிரச்சினையில் கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அறிவித்த நிலையில், அதற்கு கர்நாடக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த அறிவிப்பை மத்திய அரசு கிடப்பில் போட்டு விட்டது.
தமிழக அரசும் இந்த பிரச்சினையில் பொறுப்பில்லாத அணுகுமுறையைத் தான் கடைபிடித்து வருகிறது. மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 4 மாதங்கள் ஆகியும் அதை விசாரணைக்குக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தருவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து தெரியப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை.
இத்தகைய சூழலில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் வரும் 23 ஆம் தேதி திங்கட்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது. சென்னையில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமை வகிப்பார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையிலும், அரியலூரில் பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ. குரு தலைமையிலும் போராட்டம் நடைபெறும். சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையிலும் அறப்போராட்டம் நடைபெறும்.’’
Monday, March 16, 2015
பா.ம.க. மாதிரி பட்ஜெட்: ஊழலை ஒழிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட லோக் அயுக்தா - ராமதாஸ் வெளியிட்டார்
பா.ம.க. மாதிரி பட்ஜெட்: ஊழலை ஒழிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட லோக் அயுக்தா - ராமதாஸ் வெளியிட்டார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2015–16ம் ஆண்டுக்கான மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:–
2015–16ம் ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த வருமானம் ரூ. 2 லட்சத்து 78 ஆயிரத்து 656 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் மொத்த வருமானத்தை விட ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 605 கோடி அதிகம். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாழுவது, வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலம் ரூ.85 ஆயிரம் கோடி கூடுதலாக வருமானம் பெறுவதன் மூலம் இது சாத்தியமாகும்.
நடப்பு ஆண்டின் வருவாய் செலவினத்தில் ரூ. 40 ஆயிரம் கோடி நிலுவை கடனில் அசலாக செலுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். இந்த நிதி ஆண்டின் நிதி பற்றாக்குறை ரூ. 100 கோடி என்ற அளவில் இருக்கும்.
ஊழலை ஒழிக்க 12 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரியே ஊழல் ஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். அந்த துறையில் ஏதாவது ஊழல் நடந்தால் அதற்கு அந்த அதிகாரியே பொறுப்பு. இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழலை ஒழிக்க தமிழ் நாட்டில் ‘லோக் அயுக்தா’ அமைக்கப்படும். இது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும். முதல்–அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் லோக் அயுக்தா வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
காவல் துறை சுதந்திரமாக செயல்பட மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவார்.
வேலை வாய்ப்பு அலுவலங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 84.68 லட்சம் இளைஞர்களில் சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு சுயதொழில் முதலீட்டு கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். விவசாயத்துக்கு தேவையான அனைத்து இரு பொருட்களும் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பஸ் கட்டணம் குறைக்கப்படும். சுகாதார வசதி அதிகரிக்கப்படும். பள்ளி கல்வி துறைக்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பன உள்பட 60 அம்சங்களை கொண்டதாக பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட் அமைந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2015–16ம் ஆண்டுக்கான மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:–
2015–16ம் ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த வருமானம் ரூ. 2 லட்சத்து 78 ஆயிரத்து 656 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் மொத்த வருமானத்தை விட ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 605 கோடி அதிகம். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாழுவது, வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலம் ரூ.85 ஆயிரம் கோடி கூடுதலாக வருமானம் பெறுவதன் மூலம் இது சாத்தியமாகும்.
நடப்பு ஆண்டின் வருவாய் செலவினத்தில் ரூ. 40 ஆயிரம் கோடி நிலுவை கடனில் அசலாக செலுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். இந்த நிதி ஆண்டின் நிதி பற்றாக்குறை ரூ. 100 கோடி என்ற அளவில் இருக்கும்.
ஊழலை ஒழிக்க 12 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரியே ஊழல் ஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். அந்த துறையில் ஏதாவது ஊழல் நடந்தால் அதற்கு அந்த அதிகாரியே பொறுப்பு. இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழலை ஒழிக்க தமிழ் நாட்டில் ‘லோக் அயுக்தா’ அமைக்கப்படும். இது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும். முதல்–அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் லோக் அயுக்தா வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
காவல் துறை சுதந்திரமாக செயல்பட மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, தமிழக காவல் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவார்.
வேலை வாய்ப்பு அலுவலங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 84.68 லட்சம் இளைஞர்களில் சுயதொழில் தொடங்க விரும்புவோருக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு சுயதொழில் முதலீட்டு கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். விவசாயத்துக்கு தேவையான அனைத்து இரு பொருட்களும் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பஸ் கட்டணம் குறைக்கப்படும். சுகாதார வசதி அதிகரிக்கப்படும். பள்ளி கல்வி துறைக்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பன உள்பட 60 அம்சங்களை கொண்டதாக பா.ம.க.வின் மாதிரி பட்ஜெட் அமைந்துள்ளது.
Sunday, March 15, 2015
மோடியை வைத்துக் கொண்டு தமிழக மீனவர்கள் மீது தாக்குதலா?.. ராமதாஸ் கொதிப்பு
சென்னை: பிரதமர் மோடி யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர் இருந்த இடத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில் தமிழக மீனவர்கள்ம மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய செயல் கடும் கண்டனத்துக்குரியது. இதற்காக, இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமான வேளையில் ஒரு படகில் ஏறிய சிங்களப் படையினர் அதிலிருந்த 5 மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்துள்ளனர்.
சிங்களக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். 3 மீனவர்கள் முதல் உதவிக்குப் பிறகு வீடு திரும்பி விட்ட நிலையில், கனி, கலைஞானம் ஆகிய மீனவர்கள் கொடிய காயங்களுடன் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். சிங்களக் கடற்படையினரின் இந்த கொடிய தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன் சிங்களப்படை நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு சேதமடைந்தது. அதனால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளாகவே மீன் பிடித்தாலும், சிங்களப்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.ஒருவேளை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாலும் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்ப வேண்டியது தான் இலங்கைப் படையின் பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை தாக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவதையும், இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்துவதையும் ஏற்க முடியாது. இது 22.01.2013 அன்று தில்லியில் நடந்த இந்திய & இலங்கை கூட்டு ஆணையத்தின் எட்டாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறிய செயல் ஆகும்.கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பான சம்பவங்களை குறைத்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டிருக்கின்றன. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எக் காலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது. அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக, இலங்கையின் அழைப்பை ஏற்று அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து சில கி.மீ தொலைவில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை இந்தியா மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.. இதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, இனியும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இலங்கை தூதர் மூலம் அந்நாட்டு அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Saturday, March 14, 2015
இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்; ராமதாஸ்
இலங்கையின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அங்கிருந்து சில கி.மீ தொலைவில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை இந்தியா மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும். இதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: இலங்கையை எச்சரிக்க வேண்டும்
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமான வேளையில் ஒரு படகில் ஏறிய சிங்களப்படையினர் அதிலிருந்த 5 மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்துள்ளனர்.
சிங்களக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். 3 மீனவர்கள் முதல் உதவிக்குப் பிறகு வீடு திரும்பி விட்ட நிலையில், கனி, கலைஞானம் ஆகிய மீனவர்கள் கொடிய காயங்களுடன் இராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். சிங்களக் கடற்படையினரின் இந்த கொடிய தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன் சிங்களப்படை நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு சேதமடைந்தது. அதனால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளாகவே மீன் பிடித்தாலும், சிங்களப்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.
ஒருவேளை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாலும் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்ப வேண்டியது தான் இலங்கைப்படையின் பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை தாக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவதையும், இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்துவதையும் ஏற்க முடியாது. இது 22.01.2013 அன்று தில்லியில் நடந்த இந்திய & இலங்கை கூட்டு ஆணையத்தின் எட்டாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறிய செயல் ஆகும். கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,‘‘ சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பான சம்பவங்களை குறைத்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டிருக்கின்றன. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எக் காலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது. அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இலங்கையின் அழைப்பை ஏற்று அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து சில கி.மீ தொலைவில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை இந்தியா மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.. இதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, இனியும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இலங்கை தூதர் மூலம் அந்நாட்டு அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் கிள்ளிவளவன் மறைவு... ராமதாஸ் இரங்கல்
பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:''காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் தி.சு. கிள்ளிவளவன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (13.03.2015) காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய இரு தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர்; இணைந்து பணியாற்றியவர். எனக்கும் நல்ல நண்பராக திகழ்ந்தார். ஊழல், பணத்தாசை ஆகியவற்றின் நிழல் கூட தம்மை நெருங்காமல் பார்த்துக் கொண்டவர்.இளம் வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இறுதி வரை அரசியலில் இருந்தாலும் எளிமை ஒன்றையே தனது அடையாளமாகக் கொண்டவர். சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழக அரசியலின் அனைத்து தகவல்களையும் தமது விரல் நுனியில் வைத்திருந்தவர். அவரது மறைவு தமிழக அரசியல் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். ''
பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை: 16ஆம் தேதி சென்னையில் வெளியீடு
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, பொதுமக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோக்குடன் கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கையையும், 2008&09 ஆம் ஆண்டு முதல் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மன்றத்தில் முன்வைத்து வருகிறது.
பா.ம.க. வெளியிடும் நிழல் நிதிநிலை அறிக்கைகள் சான்றோர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், 2015-16 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை கடந்த 8ஆம் தேதி டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக 2015&16 ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை நாளை மறுநாள் (16.03.2015) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிடவுள்ளார். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார சூழல், தமிழகத்தை மிரட்டும் ரூ.4 லட்சம் கோடி கடன்சுமை, 8 ஆண்டுகளாக தொடரும் மின்வெட்டு, மின்வாரியத்தின் கடன் சுமை ஆகியவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களை நடப்பாண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்திருக்கிறது.
பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கையில்,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக கர்நாடக நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் போதிலும், தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஆனால், மேகதாது அணை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது களமிறங்கியுள்ள கர்நாடக அரசு, புதிய அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 நிறுவனங்களை முதற்கட்டமாக தேர்வு செய்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிதியை நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா ஒதுக்கியுள்ளார்.
புதிய அணை கட்டுவதற்காக மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்த பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தவோ, ஒப்புதல் பெறவோ தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானவை என்பது மட்டுமின்றி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடியவையாகும். கர்நாடக அரசின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு அனுமதிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணையில் 48 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. தமிழகத்தில் வடக்கே சென்னையில் தொடங்கி, தெற்கே மதுரை, இராமநாதபுரம் வரை உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை காவிரி நீர் தான் நிறைவேற்றுகிறது. மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால், இத்திட்டங்கள் பயனற்றுப் போய்விடும். மொத்தத்தில் தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி நீர் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பது தான்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு 8 ஆண்டுகளும், மத்திய அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டு இரு ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்தியில் ஆண்ட அரசும், இப்போது ஆளும் அரசும் முன்வராதது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற அடுத்த வாரமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அறிவித்தார். ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான அனந்தகுமாரும், சதானந்த கவுடாவும் மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து அமைச்சர் உமாபாரதியின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு அமைக்கப்படாது என்பதையும், காவிரி பிரச்சினை தொடர்பாக எந்த சிக்கல் வந்தாலும் மத்திய அரசு தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டு தான் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஆணையையும் மதிக்காமல் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் செயல்படும் நிலையில், தமிழகத்தில் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது தான் தமிழகத்தின் சாபக்கேடு. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும்படி பலமுறை வலியுறுத்தியும் ‘எல்லாம் தெரிந்த முதலமைச்சர்’ அந்த யோசனையை ஏற்கவில்லை. மேகதாது அணை கட்ட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு 4 மாதங்கள் ஆகும் நிலையில் அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதிலிருந்தே இப்பிரச்சினையில் தமிழக அரசின் அக்கறையை புரிந்து கொள்ளலாம்.
காவிரி நீர் இல்லை என்றால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் இல்லை என்பதை உணர்ந்து கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் இப்பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் நீதியின் நோக்கில் பார்த்து மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
Friday, March 13, 2015
டிராபிக் ராமசாமி கைது கண்டிக்கத்தக்கது : ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை புரசைவாக்கத்தில் இளம் தொழிலதிபர் ஒருவரை மிரட்டியதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் இராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 82 வயதான டிராபிக் ராமசாமி மகிழுந்தின் கண்ணாடியை உடைத்தார் என்பதும், தொழிலதிபரை மிரட்டினார் என்பதும் நம்பவே முடியாத குற்றச்சாற்றுகள் ஆகும். இவற்றின் அடிப்படையில் அவரை காவல்துறை கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி சென்னையின் பல பகுதிகளில் ஆளுங்கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றுவதில் டிராபிக் இராமசாமி தீவிரம் காட்டி வந்தார். கிரானைட் ஊழல் குறித்து சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரை பழிவாங்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்த தமிழக அரசும், காவல்துறையும் நடக்காத ஒரு நிகழ்வுக்காக தொழிலதிபரிடம் புகார் பெற்று கைது செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இராமசாமி கைது செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது இதை உறுதி செய்கிறது. கைது செய்யப்பட்ட இராமசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ரத்தக் கசிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே, அவரை விடுதலை செய்வதுடன், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கையும் திரும்பப் பெற வேண்டும்.’’
Wednesday, March 11, 2015
பயன்படுத்தப்படாத ரூ.4400 கோடி: தமிழகத்தில் சீரழியும் கல்வித் துறை: ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டவும், ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளிகளை சீரமைக்கவும் வழங்கப்பட்ட ரூ.4400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு விடுதி கட்டுதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
ஒருங்கிணைந்த தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கான ஆண்டு பணித் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக தில்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடந்த திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) 46 ஆவது கூட்டத்தில் தான் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன.
தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்தில் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் 200 புதிய பள்ளிகளையும், 2010-11 ஆம் ஆண்டில் 344 புதிய பள்ளிகளையும், 2011-12 ஆம் ஆண்டில் 552 புதிய பள்ளிகளையும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி 2009 முதல் 2012 வரையிலான 3 ஆண்டுகளில் மொத்தம் 1096 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2009-10 ஆண்டு முதல் இப்போது வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ளன.
மேலும் 75 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. அதாவது ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிகள் 6 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையவில்லை. மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் 2033 பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.
மாணவிகள் தங்கிப் படிப்பதற்காக 44 விடுதிகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன. 5265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன; மீதமுள்ள 4345 பள்ளிகளில் இதற்கான எந்தப் பணியும் இன்று வரை தொடங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 1616 அறிவியல் ஆய்வகங்கள், 1504 கணினி அறைகள், 1873 நூலகங்கள், 1990 கலை/கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கும் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளை தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை.
இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியின் அளவு மட்டும் ரூ. 4400 கோடி ஆகும். தில்லியில் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடைநிலைக் கல்வித்துறை செயலர் பிருந்தா சரூப், மாணவ, மாணவியரின் கல்வி சார்ந்த பணிகளில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார். மத்திய அரசு செயலாளர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, 2010-11 ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட வேண்டிய 344 பள்ளிக்கட்டிடங்களை வரும் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அக்கெடு முடிய இன்னும் 3.5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய பள்ளிகள் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே விடை தெரிந்த வினா.
புதிதாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை என்ற போதிலும் அப்பள்ளிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. கட்டிடங்கள் இல்லாத நிலையில் அவை மரத்தடிகளிலும், பாழடைந்த பழைய கட்டிடங்களிலும் தான் செயல்படுகின்றன. தமிழகத்தை உலகின் உயர்கல்வி மையமாக மாற்றுவோம் என்று கூறியவர்களின் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகள் மரத்தடிகளில் நடப்பது சோகத்திலும் சோகமான விஷயமாகும். ரூ.4400 கோடி என்பது மிகப்பெரிய தொகையாகும். இதைக் கொண்டு அரசு பள்ளிகளை சிறப்பான முறையில் மேம்படுத்தமுடியும். ஆனால், கிடைத்த பணத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிக மோசமான சூழலில் கல்வி பயிலும் நிலைக்கு மாணவர்களைத் தமிழக அரசு தள்ளியுள்ளது. தமிழக அரசின் இந்த அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாததால் கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு புதிய பள்ளிகளை கட்டுதல் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் புதிய பள்ளிகளை கட்ட கடந்த 3 ஆண்டுகளாக ஒரு காசு கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஜெயலலிதா தான் நிர்வாகத்திறமை மிக்கவர்; அவரது ஆட்சியில் தான் தமிழகம் வளரும் என்ற மாயத் தோற்ற பலூன் சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வந்த நிலையில், அது வெறும் மாயை என்பதை இவ்விவரங்கள் உறுதி செய்கின்றன. எனவே, வெற்று விளம்பரங்களைச் செய்யாமல், கிடப்பில் போடப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிஉதவியுடன் கூடிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதா? ராமதாஸ் கண்டனம்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 11.03.2015 புதன்கிழமை ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தை முடக்க அரசு சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை.
பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவ-மாணவியர் தங்களின் கோரிக்கைகளுக்காக 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் எந்த கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினர். 12 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின்போது முக்கிய சாலைகளில் திடீர் திடீரென மறியல் செய்தனர்.
இதை முறியடிக்க காவல்துறை அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களை கைது செய்து சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள மதுராந்தகத்திலும், கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சுடுகாட்டிலும் நள்ளிரவில் இறக்கிவிட்ட அவலமும் நடைபெற்றது.
இதற்கெல்லாம் அஞ்சாமல் தங்களின் உரிமைக்காக போராடிய இவர்களுடன் 3 கட்ட பேச்சு நடத்திய தமிழக அரசு, இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. தொடர்ந்து அமைச்சர்களுடன் இது குறித்து விவாதித்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா,சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர் வேலை வழங்குவது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்தார்.
ஆனால், பெயரளவில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியதைத் தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தான் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாநிலை போராட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை அழைத்து பேசுவதற்கு பதிலாக அவர்களை கைது செய்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விடும் அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, ‘‘இப்போதைக்கு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது; நீங்கள் போராட்டம் நடத்த விரும்பினால் தாராளமாக போராடிக் கொள்ளுங்கள்’’ என்று தமிழக அரசின் உயரதிகாரிகள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் பின்னடைவுப் பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள்; முதுநிலைப்பட்டம் பெற்ற 200 பேர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், 100 பேர் கல்லூரி விரிவுரையாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். இவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், வாக்குறுதி அளித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இவற்றை நிறைவேற்ற அரசு தயங்குவற்கானக் காரணம் தெரியவில்லை.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை ஜெயலலிதா இன்னும் நிறைவேற்றவில்லை; சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் அரசு காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலேயே தமிழக அரசு இவ்வாறு நடந்து கொண்டால், மற்ற பிரச்சினைகளில் அரசின் செயல்பாடுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணரலாம்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்வது தான் ஒரு நல்ல அரசுக்கான இலக்கணமாக இருக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் வீதியில் இறங்கி போராடிய பிறகும் அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. இதை உணர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited: