சென்னை: இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல்
மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி
கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு
காதல் வந்தால் காதலியுங்கள் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சென்னை அடையாறில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான். பாமகவை தவிர எந்த கட்சியும் வளர்ச்சி அரசியலைப் பற்றி பேசவில்லை. இதனால் பாமகவை பற்றி மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எங்களால் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனவேதான் புதிய அரசியலை பேசுகிறோம்.
மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறோம். மது, இலவசங்கள், சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது. இதை சொல்வதால் சினிமாவுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. மக்களை நல்வழிப்படுத்தும் தரமான சினிமாவை கொடுங்கள்.
இளம் தலைமுறையினருக்கு எவ்வளவோ கடமைகள், பொறுப்பு இருக்கிறது. காதல் மட்டும்தான் உலகமா? காதல் நாடகத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இதை அரங்கேற்றி கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது. முதலில் படித்து வேலை பார்க்கட்டும். அதன்பிறகு காதல் வந்தால் காதலியுங்கள்.
நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அறியா பருவத்தில் நடக்கும் காதல் நாடகத்தைதான் எதிர்க்கிறோம். இதற்குதான் சிலர் கூச்சல் போடுகிறார்கள். செல்போனும், சினிமாவும் தான் மாணவர்களை கெடுக்கிறது. படிக்கும்போது செல்போன் தேவையில்லை. பெற்றோர்கள் இதை அனுமதிக்காதீர்கள்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை. நன்றாக படியுங்கள் என்றார் அவர்.

No comments:
Post a Comment