சென்னை: திமுக, அதிமுகவிற்கு மாற்று அணியாகவே நாங்கள் தொடருவோம் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "யாரையும் நம்பி நாங்கள் இல்லை, எங்களுடைய பலத்தை நம்பியே தேர்தலை எதிர்கொள்கிறோம்.
நாங்கள் 2016 இல் ஆட்சி அமைத்தால் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்கான கையெழுத்துதான். தி.மு.க மதுவை அறிமுகப்படுத்தி 3 தலைமுறைகளை அழித்து விட்டது.அதன்பிறகு வந்த அ.தி.மு.க.வும் வீதிதோறும் மதுக்கடைகளை திறந்து மதுவை திணித்து வருகிறது. இரு கட்சிகளும் தமிழகத்தை வீணடித்து விட்டனர்.திமுக மீதான நம்பிக்கையை மக்கள் முழுவதும் இழந்துவிட்டார்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று அணியாகவே நாங்கள் தொடருவோம்" என அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment