Tuesday, February 24, 2015

'சிலுவையில் அறைந்து கொண்டது அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்'!

 
'சிலுவையில் அறைந்து கொண்டது அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்'!
 
சென்னை: சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹூசைனியின் செயல் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கராத்தே வீரர் ஷிகான் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சிலுவையில் அறைந்து கொண்ட ஷிகான் ஹூசைனியின் செயல் அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம் என்று கூறியுள்ளதோடு, இதனை  ஜெயலலிதா ஊக்குவிப்பது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் மத மாற்றம் செய்வதே அன்னை தெரசா சேவையின் நோக்கம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், "காமலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ?" என விமர்சித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காமெடிக்கு அளவே இல்லையா? என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: