இந்து அமைப்பைச் சேர்ந்தோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையில் திங்கள்கிழமை (ஜூலை 22) பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவி்த்துள்ளது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் இதுதொடர் பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் இதுதொடர் பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
திருச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளில் கடந்த பல மாதங்களாக குற்றவாளி களை காவல்துறையினரால் நெருங்கக் கூட முடியவில்லை.
தமிழக காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால் கொலைகாரர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் அச்சம் போய்விட்டது. பொதுமக்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை எவரு மே சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது தான் தமிழகத்தின் இன்றைய நிலை ஆகும்.
ரமேஷின் படுகொலை உள்பட தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகளைக் கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவிக்கிறது’’என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment