தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பாமக எம்எல்ஏவும் வன்னியர் சங்க தலைவருமான குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், மத்திய மாநில அரசுகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குரு கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்த சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்த போதும் மீண்டும் குரு கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரு, தனது வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment