Wednesday, July 31, 2013

மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற கொள்கையை அரசு கடை பிடிக்கிறது: ராமதாஸ்

மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற மன சாட்சியில்லாத கொள்கையை அரசு கடை பிடித்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட மாணவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூடகோரி உண்ணாவிரதம் இருக்கும் மதுரை சட்டக்கல்லூரிமாணவிக்கு ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கடந்த திங்கட்கிழமை முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
அவருக்கு ஆதாரவாக மேலும் சில மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் உண்ணாநிலையில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில் மாணவர்கள் தொடங்கியுள்ள இப்போராட்டத்திற்கு பா.ம.க.வின் பாராட்டுக்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான போராட்டங்களை பா.ம.க. நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி யார் போராட்டம் நடத்தினாலும் அதற்கு முழுமையான ஆதரவையும் பா.ம.க. அளித்து வருகிறது. இதனால், மதுவின் தீமைகள் குறித்தும், மதுவிலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருகிறது.
ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மது விற்பனையை அதிகரிப்பதில் தான் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மார்ச் 31–ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போதிலும் அதை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆகஸ்ட் 14–ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கண்டிப்புடன் கூறிவிட்ட போதிலும், மதுக் கடைகளை மூட தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் மாண்டாலும் பரவாயில்லை மது விற்றால் போதும் என்ற மன சாட்சியில்லாத கொள்கையை அரசு கடை பிடித்து வரும் நிலையில், அதை எதிர்த்து போராட மாணவர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. மதுவுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் இன்னும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்றும், மது ஒழிப்புக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Saturday, July 27, 2013

அமைச்சர்களை நீக்குவாரா? முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவாரா? ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி!



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 27.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிகையில்,

கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம், மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சாமி, ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்ச்செல்வன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் வெற்றிவேல், கரூர் செந்தில் பாலாஜி, கோபிச் செட்டிபாளையம் கே.ஏ. செங்கோட்டையன், அரியலூர் துரை. மணிவேல், நன்னிலம் ஆர். காமராஜ், கிருஷ்ணராயபுரம் எஸ். காமராஜ், மதுரை தெற்கு செல்லூர் ராஜு, ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி. சண்முக நாதன், நெய்வேலி எம்.பி.எஸ். சுப்பிரமணியன், மானாமதுரை எம்.குணசேகரன், நாகர்கோவில் நாஞ்சில் முருகேசன், மணப்பாறை சந்திரசேகரன், சாத்தூர் ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் மீது பல்வேறு கால கட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15-ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘ ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது. கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யயாததுடன், பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார். இதன்மூலம் பேரூந்துகளை எரித்தவர்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கும் தான் அ.தி.மு.க.வில் பதவி வழங்கப்படும் என்று மறைமுகமாக கூறுகிறாரா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி, பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் அவர்களையே அமர்த்துவதைவிட ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல் எதுவும் இருக்க முடியாது. தாம் வகிக்கும் முதலமைச்சர் பதவி மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், சட்டப்பேரவையில் கூறியவாறு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாற்றுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்க¬ளையும் பதவி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க.வினரால் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்காக இழப்பீட்டை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவே செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சக்திகளுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, July 25, 2013

ஏழைகளின் வாழ்வுடன் விளையாட வேண்டாம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 25.07.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 2004&05 ஆம் ஆண்டின் அளவான 37.2 விழுக்காட்டிலிருந்து 2011&12 ஆம் ஆண்டில் 21.9 விழுக்காடாக குறைந்துள்ளது என்ற மத்தியத் திட்டக்குழுவின் அறிவிப்பு மகிழ்ச்சியளித்தது. ஆனால், கிராமப் பகுதிகளில் தினமும் ரூ27. 20&ம், நகர்ப்புறங்களில் ரூ.33.30&ம் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என்ற அளவுகோளின் அடிப்படையில் தான் இந்த புள்ளி விவரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்ததும் வருத்தமும், வேதனையும் தான் விஞ்சியது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம் சாதனை என்பதைவிட தந்திரம் என்பது தான் உண்மை. கிராமப்புறங்களில் தினமும் 27 ரூபாய் செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டியவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது எதார்த்தங்களை கணக்கில் கொள்ளாமல் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களின் அளவு குறைந்து விட்டதாக கணக்கு காட்டப்படும் 7 ஆண்டுகளில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 300% வரை அதிகரித்திருக்கின்றன. மத்திய திட்டக்குழு வலியுறுத்தலின்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 100% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வறுமைக்கோட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது எதார்த்தத்திற்கு எதிரான செயல் ஆகும். ஒரு லிட்டர் குடிநீரின் அளவு ரூ. 25&க்கும் மேல் விற்கும் நிலையில், அதே தொகையில்  ஒருவர் ஒருநாள் முழுவதற்குமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஏழைகளின் வாழ்க்கையுடன் விளையாடும் செயலாகும்.
நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வறுமையை ஒழித்து விட்டோம் என்று கணக்கு காட்டி செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவே இப்புள்ளி விவரத்தை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதன் மூலம் மத்திய அரசு வறுமையை ஒழிக்க வில்லை.... மாறாக வறியவர்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் போதும், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இதுபோன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. 2004&ஆம் ஆண்டில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பெயரில் ஒரு கட்சியின் செலவில் செய்யப்பட்ட பிரச்சாரம் தான் இப்போது ‘இந்தியாவில் வறுமை ஒழிகிறது’ என்ற பெயரில் அரசு செலவில் செய்யப்படுகிறது. ஆனால், இத்தகைய தந்திரங்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இன்றைய நிலையில், மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வரும் தவறான கொள்கைகள் காரணமாக இந்தியாவில் சமத்துவமின்மையும், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 77% மக்கள் தினமும் ரூ.20 கூட சம்பாதிக்க முடியாமல் தடுமாறும் நிலையில், இந்தியாவின் 55 கோடீஸ்வரர்களிடம் மட்டும் ரூ. 10 லட்சம் கோடி சொத்து முடங்கிக் கிடக்கிறது என்பது தான் உண்மை.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாகவும், தரமாகவும் வழங்குதல், இந்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்திற்கு தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி அதை இலாபகரமான தொழிலாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் தான் வறுமையை ஒழிக்கவும், சமத்துவத்தை ஏற்படுத்தவும் முடியும். மாறாக மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையோ, நாட்டின் பொருளாதாரத்தையோ ஒரு போதும் உயர்த்த முடியாது. எனவே,  எதார்த்த நிலைக்கேற்ப வறுமைக் கோட்டு வரம்பை நிர்ணயித்து, அந்த வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

Wednesday, July 24, 2013

மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடி... தண்ணீர் திறக்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மேட்டூர் அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:கர்நாடகத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவது காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அதேநேரத்தில் குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் விசயத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்து வருவது கவலையை உருவாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவிட்டதாலும், பருவமழை பொய்த்ததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறிப்பிடத்தக்க பரப்பளவில் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிரும் வறட்சி காரணமாக கருகியது.வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் போதிய அளவு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், நடப்பாண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்தால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியையாவது ஈடுகட்ட முடியும்.குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், நடப்பாண்டில் ஜூலை மாதம் முடிவடையப் போகும் நிலையிலும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.குறுவை சாகுபடி ஏற்கனவே 50 நாட்கள் தாமதமாகிவிட்ட நிலையில், இப்போதாவது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அறுவடை செய்ய முடியும்; இல்லாவிட்டால் வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் சேதம் அடைந்துவிடும்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 83 அடியாக(45 டி.எம்.சி) உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் நீர்வரத்து இனி வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும். கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டதாலும் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து இப்போதே தண்ணீர் திறந்து விடப்பட்டால், பின்பருவ பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் போய்விடுமோ என்று தமிழக அரசு அஞ்சத் தேவையில்லை.மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், வீராணம் ஏரியை நிரப்பி அதன்மூலம் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க முடியும். எனவே, காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலனையும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொண்டு, இனியும் தாமதிக்காமல் மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, July 23, 2013

மருத்துவர் அய்யாவின் பாதுகாப்பில் அலட்சியம்: தமிழக அரசுக்கு கண்டன...ம் - பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை

சமூக விரோத சக்திகளால் மருத்துவர் அய்யாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது - மருத்துவர் அய்யாவின் பாதுகாப்பில் அலட்சியம்: தமிழக அரசுக்கு கண்டன...ம் - பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிக்கை
==================================
தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகளும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவும் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விசயத்தில் தமிழக அரசு மிகுந்த அலட்சியத்துடனும், பழி வாங்கும் உணர்வுடனும் நடந்து கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் அய்யா அவர்கள் கல்வி, சமூகநீதி உள்ளிட்ட மக்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறார். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக மருத்துவர் அய்யா நடத்தி வரும் போராட்டங்கள் ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைப்பவை ஆகும். மருத்துவர் அய்யா வலியுறுத்தி வரும் கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ள வலிமை வாய்ந்த சமூக விரோத சக்திகளால் மருத்துவர் அய்யாவின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் புதுச்சேரி மாநிலம் அபிஷேகப் பாக்கம் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கும்பல் கொலைவெறி தாக்குதலை நடத்தியது. அப்போது மருத்துவர் அய்யாவின் பாதுகாப்புக்காக வந்த தொண்டர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, அவரது உயிரைக் காப்பாற்றினர்.
மருத்துவர் அய்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த தமிழக அரசு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு அளித்து வந்தது. மருத்துவர் அய்யாவின் இல்லத்திற்கும், அவர் செல்லுமிடங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டு வந்தனர். நிகழ்ச்சிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும்போது அம்மாவட்ட காவல்துறையினரும் பாதுகாப்புக்கு வருவது வழக்கமாகும். கடந்த சில மாதங்களாக மருத்துவர் அய்யாவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முறையீடு அளிக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 26.04.2013 முதல் மருத்துவர் அய்யாவுக்கும், அவரது இல்லத்திற்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென திரும்பப்பெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து கடந்த ஆண்டு இறுதியிலும், நடப்பாண்டின் தொடக்கத்திலும் மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதேபோல், பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு அவர்களுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இவை குறித்து, மிரட்டல் கடிதங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் கடந்த 03.01.2013, 19.02.2013 ஆகிய நாட்களில் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரிடம் நானும், பா.ம.க.வின் மாநில நிர்வாகிகளும் எழுத்துப் பூர்வமாக புகார் செய்தோம். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். மருத்துவர் அன்புமணி இராமதாசு கடந்த 27.02.2013 அன்று காவல்துறைத் தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை மனுவாக அளித்தார்.
அதன் பின்னர் பலமுறை இந்த அதிகாரிகளை நான் நேரில் சந்தித்து இக்கோரிக்கைகள் குறித்து நினைவூட்டினேன். ஆனாலும் பயனில்லை. மருத்துவர் அய்யா, அன்புமணி இராமதாசு, ஜெ.குரு ஆகியோருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் அய்யா அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றதும், மற்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதும் கடுமையாக கண்டிக்கத் தக்கவை ஆகும்.
மருத்துவர் அய்யா உள்ளிட்ட பா.ம.க. தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதையும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் காவல்துறை அதிகாரிகளே தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டங்களின்போது சென்னை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கறுப்புக்கொடி போராட்டம் என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவர் அய்யா அவர்களை தாக்க முயன்றனர் என்பதும் காவல்துறைக்கு தெரியும். ஆனாலும், பாதுகாப்பு வழங்க இன்று வரை அரசு முன்வராததற்கு காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் பொதுமக்களே சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில், மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு, ஜெ.குரு ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க மறுப்பதன் மூலம் என்ன நடக்க வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது? என்பது தெரியவில்லை.
முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவருக்கு வழங்கப்பட வேண்டியதை விட அதிகமாகவே, கறுப்புப் பூனை படையினர் 12 பேர், தமிழக காவல்துறை சார்பில் இரு துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 75 பேரைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் ஓய்வெடுப்பதற்காக செல்லும் கொடநாடு மாளிகை, சிறுதாவூர் மாளிகை ஆகியவற்றுக்கும், ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவை போதுமானதாக இல்லை என்று கூறி கடந்த 2008-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பைப் பெற்றார். அதன்பின், 2010-ஆம் ஆண்டில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரை சந்திக்க வைத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி வலியுறுத்தச் செய்தார்.
தமக்கும், தாம் ஓய்வெடுக்கும் மாளிகைகளுக்கும் கூட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, பா.ம.க. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையினரே ஒப்புக் கொண்ட பிறகும், மருத்துவர் அய்யாவுக்கு 15 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு திடீரென திரும்பப் பெற்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன; அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சேலம் நிகழ்விற்குப் பிறகாவது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ.குரு ஆகியோருக்கு தமிழக அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Monday, July 22, 2013

குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்



தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பாமக எம்எல்ஏவும் வன்னியர் சங்க தலைவருமான குரு கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், மத்திய மாநில அரசுகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குரு கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்த சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து  செய்த போதும் மீண்டும் குரு கைது செய்யப்பட்டார். தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரு, தனது வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Sunday, July 21, 2013

அரசியல் தலைவர்கள் எவருமே சுதந்திரமாக நடமாட முடியவில்லை :ராமதாஸ்



இந்து அமைப்பைச் சேர்ந்தோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையில் திங்கள்கிழமை (ஜூலை 22) பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவி்த்துள்ளது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் சேலத்தில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளரும், ஆடிட்டருமான ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் இதுதொடர் பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
திருச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளில் கடந்த பல மாதங்களாக குற்றவாளி களை காவல்துறையினரால் நெருங்கக் கூட முடியவில்லை.
தமிழக காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால் கொலைகாரர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் அச்சம் போய்விட்டது. பொதுமக்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை எவரு மே சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது தான் தமிழகத்தின் இன்றைய நிலை ஆகும்.
ரமேஷின் படுகொலை உள்பட தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகளைக் கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாஜக சார்பில் திங்கள்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவிக்கிறது’’என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக முழு அடைப்பு போராட்டம் : பாமக ஆதரவு



இந்து அமைப்பைச் சேர்ந்தோர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையில் திங்கள் கிழமை (ஜூலை 22) பாஜக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவி்த்துள்ளது.

Saturday, July 20, 2013

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகள்: டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழகத்தில் அரசியல் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 20.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாரதீய ஜனதாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மூத்த தணிக்கையாளருமான இரமேஷ்  சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தணிக்கையாளர் இரமேஷின் வீட்டு வளாகத்தில் பதுங்கியிருந்த கொலைகாரர்கள் தான் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இரமேஷின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள்  ஏற்கனவே முறையீடு அளித்திருந்த போதும், அவருக்கு  பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டது. ஒரு தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் படுகொலையை  காவல்துறை தடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
கடந்த 9 மாதங்களில் மட்டும் இவர் சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,  இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும்  இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தமிழகக் காவல்துறையின் திறமையின்மையை  காட்டுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும்  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன; 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறைக்கு பொறுப்பு  வகிக்கும் முதலமைச்சரோ, பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வது, அப்பாவித் தொண்டர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டங்களில் கைது செய்து சிறையில் அடைப்பது,  பா.ம.க. மீது அவதூறு பரப்புவது ஆகியவற்றில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறார். பா.ம.க.வினரை பழிவாங்குவதில் காட்டும் தீவிரத்தில் பத்தில் ஒரு பங்கை சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் காட்டியிருந்தால் இது போன்ற படுகொலைகளை தடுத்து, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்திருக்க முடியும்.
ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது சாதாரணமானதாக  தோன்றவில்லை.  இதன் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

இளவரசன் சாவில் மார்க்சிஸ்ட் கட்சி அருவருக்கத்தக்க அரசியல் நடத்துகிறது: ஜி.கே.மணி கண்டனம்



பாமக தலைவர் ஜி.கே.மணி 20.07.2013 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திவ்யாவின் தந்தை நாகராஜன் மரணமும், இளவரசனின் மரணமும் இயற்கை மரணம்  அல்ல என்றும், அவை கவுரவக் கொலைகள் என்றும் கூறியிருக்கிறார்.
அவரது அறிக்கையைப் படித்த பின்னர், பொதுவுடைமை சித்தாந்தம் பேச வேண்டியவர்கள் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்களே என்ற கவலை தான் எனக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திவ்யாவும், இளவரசனும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அப்போதே தற்கொலை செய்து கொள்ளாத திவ்யாவின் தந்தை நாகராஜன் நவம்பர் மாதத்தில்  தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று வினா எழுப்பியிருக்கிறார் இராமகிருஷ்ணன். நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட போது அதற்காக இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வராத மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, இப்போது நாகராஜனின் சாவு கவுரவக் கொலை என்று கூறி சர்ச்சை எழுப்பப் பார்க்கிறது. இதன் நோக்கம் யாரையோ திருப்திப் படுத்தி, ஏதோ லாபம் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
கடந்த ஆண்டு திவ்யாவை இளவரசன் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று திருமணம் கொண்டார். தனது மகள் தவறான ஒருவரிடம் சிக்கி வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்று கவலைப்பட்ட நாகராஜன் தமது மகளை மீட்கப் போராடினார். ஆனால், அதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார். மேலும், நாகராஜனை கடுமையாக திட்டியதுடன், இதற்குப் பிறகும் நீயெல்லாம் ஏன் உயிருடன் இருக்கிறாய்? என்று கேட்டதைத் தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அப்போது நாகராஜனின் தற்கொலைக்கு காரணமான காவல் அதிகாரியை கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரவில்லை. இப்போது தடையை மீறிச் சென்று இளவரசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, அப்போது நாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. இவற்றையெல்லாம் செய்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என மார்க்சிஸ்ட்  தலைமை அஞ்சியது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்படியெல்லாம் நடந்து கொள்வதும், தங்களின் தவறை மறைப்பதற்காக வருந்தத்தக்க ஓர் உயிரிழப்பை கவுரவக் கொலை என்று முத்திரை குத்தி கொச்சைப் படுத்துவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் அருவருக்கத்தக்க அரசியல் ஆகும்.
இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்து வந்ததற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று எங்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதற்குப் பிறகும் இதனுடன் பா.ம.க.வை சம்பந்தப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மார்க்சிஸ்ட் தலைமை உட்பட, இளவரசனுக்காக இன்று கண்ணீர் வடிப்பதைப் போல நடிப்பவர்கள் எவருமே அவர் உயிருடன் இருந்த போது வேலை வாங்கித்தரவோ அல்லது தற்கொலை மனநிலையுடன் இருந்த போது கவுன்சலிங் வழங்கவோ முன்வரவில்லை. இளவரசன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது அதைக் கண்டிக்க மார்க்சிஸ்ட் முன்வரவில்லை. இதற்காகவெல்லாம் வெட்கப்படாமல் இளவரசனின் தற்கொலைக்கு  புதுப்புது பெயர்களைச் சூட்ட இராமகிருஷ்ணன் முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைத் தவறு செய்தாலும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்ப்போம்- மற்ற சமுதாயத்தினர் தவறே செய்யாவிட்டாலும் விமர்சிப்போம் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றால் அதை ‘ஒரு சாதி ஆதரவு வெறி’ என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?  மார்க்சிஸ்ட் அகராதியில் இதற்குப் பெயர் தான் பொதுவுடைமையா? என்பதை இராமகிருஷ்ணன் தான் விளக்கவேண்டும்.
மரணங்கள் இயற்கையாக நிகழாத போது அதற்கு காரணமானவர்கள் தான் குற்றவாளிகள் என்று ‘நீதிபதி’ இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அது உண்மை தான். அதன்படி பார்த்தால், மக்களால் மதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில்  ஒருவரான டபிள்யூ. ஆர். வரதராஜன் மீது, உட்கட்சி பதவிச் சண்டை காரணமாக அவதூறான பழியை சுமத்தி, விசாரணை அறிக்கை என்ற பெயரில்  அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றப்பத்திரிகையை தயாரித்து, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த குற்றவாளிகள் யார் யார் என்பதை இராமகிருஷ்ணன் அடையாளம் காட்டுவாரா?
மார்க்சிஸ்ட் கட்சியினர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை வைத்தும், எல்லோருக்கும் எல்லாமும்  கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை முன் வைத்தும் அரசியல் நடத்தட்டும். ‘ஒரு சாதி ஆதரவு வெறி’யுடன் மற்ற சமுதாயத்தினர் மீது அவதூறு பரப்பும் அரசியலை நடத்த வேண்டாம். இத்தகைய அரசியலை கார்ல் மார்க்ஸ், ஜோதிபாசு, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோரின் ஆன்மாக்கள் கூட ஏற்றுக் கொள்ளாது என்பதை ஒரு பாட்டாளி என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்

Friday, July 19, 2013

தமிழக மக்களின் மூன்று கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் குக்கிராமத்தில் பிறந்த நீதியரசர் திரு. ப. சதாசிவம் உச்சநீதிமன்றத்தின் தலைமை  நீதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கிறார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து மக்களோடு, மக்களாக பழகிய ஒரு தமிழர் முதன்முறையாக இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றிருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டதுமே தாம் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்தங்கள் பற்றி  நீதியரசர் சதாசிவம் தெரிவித்த கருத்துக்கள் அவர் எந்த அளவுக்கு முற்போக்கு சிந்தனையாளர் என்பதைக் காட்டுகின்றன. தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. இதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் சதாசிவம், நீதிபதி பணிக்கான தகுதியில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பல்வேறு சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காகத் தனிச் சட்டம் எதுவும் கொண்டுவரத் தேவையில்லை என்ற போதிலும், 1993&ஆம் ஆண்டில் நீதிபதிகள்   நியமனத்திற்காக கொலிஜியம் முறை எவ்வாறு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டதோ, அதேபோல நீதிபதிகள் நியமனத்தில் தகுதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் நிரந்தரமான ஓர் ஏற்பாட்டை தலைமைநீதிபதி அவர்கள் செய்யவேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, முந்தைய ஆட்சியில் 06.12.2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று வரை அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.  இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தியில் வாதிடவும், வழக்கு நடத்தவும் அனுமதி அளிக்கப்படும் நிலையில்,  தமிழில் வாதிடப்பட்ட ஒரே காரணத்திற்காக வழக்குகளே தள்ளுபடி செய்யப்படும் அவலம் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. எந்த ஓர் இனத்திற்கும் அவர்களின் சொந்த மொழியில் வாதிடும் வாய்ப்பு மறுக்கப்படுவது மிகவும் கொடுமையானது. எனவே, இந்த பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக  கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டாலும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் நேர்நிற்க மனுதாரர்களும், வழக்கறிஞர்களும் தில்லிக்குத் தான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்திலிருந்து தில்லிக்கு சென்று வருவது சாதாரண மக்களால் சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. எனவே, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும் நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சி ஏற்படும். ஆனால், ஒரு தமிழர் தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும், சமூக நீதிக்காகவும் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தினார் எனும் போது தான் தமிழர்களுக்கு பெருமிதம் ஏற்படும். நீதியரசர் சதாசிவம் அவர்கள் 9 மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியில்  இருப்பார் என்ற போதிலும், அவரது பணிக்காலம் தமிழர்கள் பெருமையும், பெருமிதமும் படும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, July 18, 2013

இளவரசன் தற்கொலை: பா.ம.க.வை சிலுவையில் அறைந்தவர்கள் பாவங்களைச் சுமப்பார்களா? மருத்துவர் இராமதாசு வினா

"தருமபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் இரண்டாவது உடற்கூறு ஆய்வறிக்கையை தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இளவரசன் கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது"

சர்ச்சைக்குரிய ஒரு மரணம் குறித்த உண்மை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இளவரசனின் மரணம் கொலை அல்ல என்பது எங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெளிவாகவே தெரிந்திருந்தது. அதேபோல், இளவரசனின் தற்கொலைக்கு அவரது திடமற்ற மனநிலையும், அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்த தலித் அமைப்புகளின் செயல்பாடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் காரணம் என்பதையும் அனைவரும் நன்றாக அறிந்திருந்தனர்.

ஆனால், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில், இளவரசன் தற்கொலை குறித்த செய்தி வெளியானதுமே, அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயாமல், இதற்கெல்லாம் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குற்றஞ்சாற்றி சிலுவையில் அறைந்தன. இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், இளவரசனையும், திவ்யாவையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பிரித்ததால் தான் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தரப்பினரும் வதந்திகளை பரப்பினர்.

ஆனால், உண்மை இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது. தொடர் வண்டியில் மோதியதால் தான் இளவரசன் உயிரிழந்திருக்கிறார் என்றும், அவர் மீது வேறு எத்தகைய தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தாக்கல் செய்துள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையிலும், வேறு சில ஆதாரங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இளவரசனிடம் இருந்து திவ்யாவை பிரித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சில அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய செய்திகளும் பொய்யானவை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இளவரசனும், திவ்யாவும் பிரிந்தது தனிப்பட்ட இருவரின் பிரச்சினை ஆகும். இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை. இன்னும் கேட்டால், திவ்யாவை இளவரசன் திருமணம் செய்து கொண்ட பின்னர் செலவுக்கு பணம் இல்லை என்றும், இளவரசனுக்கு வேலை கிடைக்காத நிலையில், வேறு சில பிரச்சினைகளும் ஏற்பட்டதால் தான் அவருடன் தொடர்ந்து வாழ முடியாமல் திவ்யா தாயாரிடம் சென்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த ஆணையின்படி தான், திவ்யா அவரது தாயாருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.

தற்கொலை மனநிலை

மேலும், இளவரசன் ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்திருக்கிறார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த மாதம் சென்னை வந்த இளவரசன், ஒரு அரசியல் கட்சித் தலைவரை சந்தித்து தமக்கு வேலை பெற்றுத் தருமாறு கேட்ட போது, அந்தத் தலைவர் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டதுடன், மனம் நோகும்படியும் பேசியிருக்கிறார். இதனால், மனம் வெறுத்த இளவரசன், அங்கிருந்து தாம் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்து தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் இளவரசன் கடந்த 4-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு, தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவரிடமிருந்து சிலரால் திருடிச் செல்லப்பட்டு, பின்னர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்து தான் என்பது தடய அறிவியல் துறை ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திடமான மனநிலை இல்லாததும், மது போதையும் தான் இளவரசனின் தற்கொலைக்கு காரணம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவை என்ற அடிப்படையில், இளவரசனின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்று தான் என்ற போதிலும், அவரது தற்கொலைக்கு காரணம் இதுதான் என்பது மறுக்க முடியாதது ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, இளவரசனின் மரணத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியை சிலுவையில் அறைந்தவர்கள் அதற்கான பாவத்தை சுமப்பார்களா? என்பது தான் நான் எழுப்ப விரும்பும் வினா ஆகும்.

தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இளவரசன், தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் உள்ள தொடர்வண்டி பாதை அருகே அமர்ந்தபடி தமது முடிவு குறித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை திட்டத்தைக் கைவிட்டு விட்டு வீடு திரும்பும்படி, அறிவழகன் என்ற உறவினர் தொலைப்பேசியில் கேட்டுக் கொண்ட போது, தாம் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதாகவும், இந்த நிலையில் தம்மால் வீட்டுக்கு வர இயலாது என்றும் கூறியிருக்கிறார்.

அதன்பின்னர், சில மணி நேரங்கள் கழித்து தான், அவர் தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொண்டார் என்ற போதிலும், அவரை காப்பாற்ற அவரது உறவினர்களோ, நண்பர்களோ முயற்சி செய்யவில்லை. இளவரசன் ஏற்கனவே ஒருமுறை தற்கொலை செய்ய முயன்றதும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்ததும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உட்பட பலருக்கு தெரிந்து இருந்திருக்கிறது. இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், இளவரசனின் மரணத்தை தடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

விடை காணப்பட வேண்டிய வினாக்கள்

இளவரசன் தற்கொலை தொடர்பான சர்ச்சைகள் இன்னும் தீரவில்லை. இளவரசன் தற்கொலை செய்து கொள்ளப் போவது அவருடன் சம்பந்தப்பட்ட பலருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. இளவரசன் தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது உடல் கிடந்த இடத்திற்குச் சென்ற அவரது உறவினர்கள் சிலர், இளவரசனின் முழுக்கால் சட்டை பையில் இருந்த தற்கொலைக் கடிதத்தை எடுத்துள்ளனர்.

அதை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கைப்பற்றி வைத்துக் கொண்டு, இதுபற்றி யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார். அக்கடிதத்தை அவர் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தொடர்ந்து வதந்தி பரப்பி வந்திருக்கிறார். இளவரசன் தற்கொலை செய்து கொண்டதை நன்றாக அறிந்திருந்தவர்களும், அந்த உண்மையை வெளியில் சொல்ல முன்வரவில்லை.

இதன்மூலம் இளவரசனை யாரோ சிலர் படுகொலை செய்து விட்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் & சட்டம் ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இளவரசனுக்காக குரல் கொடுப்பதாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள், எத்தகைய கொடூரமான எண்ணத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.

இளவரசன் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மருத்துவ ஆய்வு கேலிக் கூத்தாக்கப்பட்டிருப்பதும் மிகவும் வருத்தமளிக்கிறது. இளவரசனின் உடல் முதல்முறையாக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போதே பல்வேறு அத்துமீறல்கள் அறங்கேற்றப்பட்டன. மருத்துவர்கள் மட்டுமே இருக்க வேண்டிய உடற்கூறு அரங்கில், சில அரசியல்கட்சிகளையும், ஜாதி அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் நுழைந்து, உடற்கூறு ஆய்வை செல்பேசியில் படம் பிடித்திருக்கிறார்கள்.

உடற்கூறு ஆய்வின் போது , மருத்துவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அவர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடியதும் காவல்துறையின் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. மருத்துவம் பற்றியும், உடற்கூறு பற்றியும் எதுவுமே தெரியாதவர்கள் உடற்கூறு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் அங்கு வைக்கப்பட்டிருந்த உடல் காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையின் எந்த மரபும் இதை அனுமதிக்காது.

தமிழக அரசின் இரட்டை நிலை

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது. மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், சில தலித் அமைப்புகளும் திட்டமிட்டு நடத்திய கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட போது, அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதை ஏற்காத தமிழக அரசு, நீதி கேட்டு போராடிய என்னையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது.

ஆனால், இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தெளிவாகத் தெரிந்த பிறகும், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய அரசு, தலித்துகளின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் ஆட்டுவிக்கும்படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது. வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டால் அதை கண்டு கொள்ள மாட்டோம்; தலித்துகள் தற்கொலை செய்துகொண்டால் கூட நீதிவிசாரணை நடத்துவோம் என்ற இரட்டை நிலையை அரசு கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

நீதியரசர் சிங்காரவேலு தலைமையிலான விசாரணை ஆணையம் அடுத்த மாத தொடக்கத்தில் விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசனின் தற்கொலை முடிவை தெரிந்து கொண்டவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்யாதது ஏன்?

இளவரசனின் தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றியவர்கள் யார்? அவர்கள் மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இளவரசன் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு காவல்துறையினர் செல்வதற்கு முன்பாகவே இவர்கள் சென்றது எப்படி? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி ஒளிந்திருக்கிறதா? என்பது குறித்தும் விசாரித்து உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்; கலவரத்தை தூண்ட முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" - இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 17, 2013

பாட்டாளி மக்கள் கட்சியின் வெள்ளி விழா



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கத்தில், சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் 16.07.1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று 25–வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும். அனைத்து மக்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தேன்.
அன்று முதல் இன்றுவரை இந்த லட்சியங்களை எட்டவும், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தவும், மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்கவும் பா.ம.க. துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து துணை நகரம் அமைக்கும் திட்டம், சென்னை விமான நிலைய விரிவாக் கத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் அமைக்கப்படவிருந்த டாட்டா டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம் ஆகியவற்றை முறியடித்து லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்க ளின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தது தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுவதற்கு காரணமாக இருந்தது மக்களை சீரழிக்கும் சாலையோர மதுக்கடைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது என எண்ணற்ற நன்மைகளை மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
1998 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய அரசில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்திற்காக எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. உலகமே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படையையே மாற்றியமைத்த தேசிய ஊரக சுகாதார இயக்கம், தமிழக மருத்துவத் திட்டங்களுக்கும் எந்த அரசும் செய்யாத வகையில் மொத்தம் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது, சேலம் மற்றும் மதுரையில் டில்லி எய்ம்ஸ்க்கு இணையான மருத்துவமனைகள், பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதித்ததுடன், புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்ட காரணமாக அமைந்தது, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதை இல்லாமல் அனைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கியது, சேலம் ரெயில்வேக் கோட்டம் அமைத்தது என பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தமிழக நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவை.
1989–ம் ஆண்டு முதல் 1996–ம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க. தனித்து போட்டியிட்டு அதன் செல்வாக்கை வளர்த்து வந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ம.க.வின் வளர்ச்சி தடைபட்டது.
இதை உணர்ந்துதான் இனிவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதென 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு எடுக்கப்பட்டது. அதில் உறுதியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இனிவரும் தேர் தல்களில் திராவிட கட்சிகள், தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைப்பதில் உறுதியாக உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி அதன் 25–ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், அது சந்தித்து வந்த சோதனைகள் சுக்கு நூறாக சிதறுவது உறுதி. வெள்ளிவிழா ஆண்டு நாம் வெற்றிகளை குவிப்பதற்கான அடித்தளமாக அமையும். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் நலனுக்கு எவையெல்லாம் தேவை என பாட்டாளி மக்கள் கட்சி கருதியதோ, அவையெல்லாம் இன்னும் நிறை வேற்றப்படாமல் தான் உள்ளன.
46 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மது, இலவசம், திரைப்படம் ஆகிய கலாச்சாரங்களால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் காலம் இட்ட கட்டளைப்படி 2016–ம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி, திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி எங்களின் பயணம் தொடரும்’’என்று கூறினார்.

85 அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை நீக்கவேண்டாம் :

அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழக அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பிரிவு அதிகாரிகளாக பணியாற்றி வரும் 85 பேருக்கு போதிய கல்வித் தகுதி இல்லை என்று கூறி பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக  சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப் பட்டிருக்கிறது.

இது ஒரு தொடக்கம் தான் என்றும், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றிவரும் ஊழியர்களின் பணி ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அந்தப்பணி முடிவடைந்த பின்னர் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் ஆபத்து இருப்பதாகவும் பல்கலைக்கழக பணியாளர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு  மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முந்தைய நிர்வாகத்தில் விதிமுறைகள், கல்வித்தகுதிகள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல் ஆசிரியப் பணியாளர்களும், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர் என்பதை  மறுக்க முடியாது. தமிழக அரசின் நிதி உதவியைக் கொண்டு தான் இந்தப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வந்தது என்பதால் இந்த முறைகேடுகளை அப்போதே தமிழக அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிவிட்ட தமிழக அரசு, இப்போது தமது புதிய நிர்வாகத்தின் மூலம் போதிய தகுதி இல்லை என ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்யத் துடிப்பது முறையல்ல.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 4500-க்கும் அதிகமான பணியாளர்களை பணி நீக்கம் செய்யவும், மீதமுள்ள ஊழியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. அதை எதிர்த்து பணியாளர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியததைத் தொடர்ந்து தான், பல்கலைக் கழக நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.

எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள பல்கலைக் கழக ஊழியர்களிடையும், மாணவர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே பல்கலைக்கழகத்தை அரசே ஏற்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இப்போது தகுதியில்லை என்று கூறி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது ஏற்கனவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயலாகும்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர்களில் பலரும் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்கள் ஆவர்; இவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள் என்பதால், இவர்களை இப்போது திடீரென பணி நீக்கம் செய்தால் அவர்களும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்திலும் மீண்டும் அமைதியற்ற சூழல் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே இப்பிரச்சினையை தமிழக அரசு கருணையுடன் அணுக வேண்டும்.

இதுபோன்ற சூழல் ஏற்படும் போதெல்லாம், சம்பந்தப்பட்டப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக, அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, அதற்குள் கல்வித் தகுதியை பெற்றுக்கொள்ளலாம் என்று சலுகை அளிப்பது தான் கடந்த கால நடைமுறை ஆகும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லை என்று பணி நீக்கம் செய்யப்பட உள்ள ஊழியர்கள் விவகாரத்திலும் தமிழக அரசு இதே அணுகுமுறையை கடைபிடித்து, அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

அனைத்து சமுதாய மக்களும் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர் :



பா.ம.க. கட்சியின் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டில் மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி கமலமம்மாள், து.மூர்த்தி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ரங்கசாமி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியபோது, ’’ நாம் கட்சியை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. பா.ம.க. கட்சிக்கு வெள்ளி விழா இந்த ஆண்டு முழுவதும் பல பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். கருத்தரங்குகளை நடத்தி நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.
சமீபத்தில் நடந்த மாமல்லபுரம் விழாவில் கட்சி தோழர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1 மாத காலத்திற்கு மேல் சிறையில் இருந்தனர். இப்போது 122 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் 8 ஆயிரம் பேர் சிறை சென்றும் நம் கட்சிக்காக தியாகம் செய்த உங்கள் அத்துணைபேருக்கும் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த தியாகம் வீண் போகாது. நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற போகின்றோம். தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெற வேண்டும். அதை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். அனைத்து சமுதாய மக்களும் இன்றைக்கு நமக்கு ஆதரவாக இருக்கின்றனர். 25 ஆண்டுகள் நமது கட்சி டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல சாதனைகள் செய்திருக்கிறது. வேறு எந்த கட்சியும் நம்மை போன்று செய்தது கிடையாது.
சமூக நீதிக்காகவும், சமூக பிரச்சனைகளுக்காகவும் எந்த கட்சியும் இது போன்று தமிழ்நாட்டில் செய்தது கிடையாது.
பா.ம.க. கொள்கை போன்று வேறு எந்த கட்சி இருந்தது என்றால் நான் அந்த கட்சியிலேயே போய் சேர்ந்து விடுவேன் என்று டாக்டர் ராமதாஸ் சொல்லி உள்ளார். இது வரைக்கும் அது போன்ற கட்சிகள் இல்லை. இதையெல்லாம் மக்களிடம் போய் சொல்லுங்கள்.
நாம் செய்த தியாகங்கள், இட ஒதுக்கீடுக்காக, சமச்சீர் கல்விக்காக, மது ஒழிப்புக்காக, மணல் கொள்ளை க்காக, கல்வி கொள்ளைக்காக, சுற்று சூழலுக்காக இது போன்று ஒவ்வொரு ஆண்டும் வரைவு நிதிநிலை அறிக்கை பட்ஜெட்டை போட்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும்தான்.
நம் கட்சியின் பெருமையை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். இன்னும் இரண்டு ஆண்டுகாலம்தான். அதற்கு பிறகு எங்களுடைய ஆட்சி வரும். அதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பா.ம.க. கட்சி ஆட்சிக்கு வரும்’’என்று தெரிவித்தார்.

Tuesday, July 16, 2013

வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க.: இனி கூட்டணியே கிடையாது- டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை மெரீனா கடற்கரை சீரணி அரங்கத்தில், சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் 16.07.1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று 25–வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும். அனைத்து மக்களுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தேன்.
அன்று முதல் இன்றுவரை இந்த லட்சியங்களை எட்டவும், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தவும், மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்கவும் பா.ம.க. துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து துணை நகரம் அமைக்கும் திட்டம், சென்னை விமான நிலைய விரிவாக் கத்திற்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வளங்களைச் சுரண்டும் வகையில் அமைக்கப்படவிருந்த டாட்டா டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம் ஆகியவற்றை முறியடித்து லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்க ளின் வாழ்வாதாரங்களை பாதுகாத்தது தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுவதற்கு காரணமாக இருந்தது மக்களை சீரழிக்கும் சாலையோர மதுக்கடைகள் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது என எண்ணற்ற நன்மைகளை மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
1998 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய அரசில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்திற்காக எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. உலகமே போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டம், அரசு மருத்துவமனைகளின் அடிப்படையையே மாற்றியமைத்த தேசிய ஊரக சுகாதார இயக்கம், தமிழக மருத்துவத் திட்டங்களுக்கும் எந்த அரசும் செய்யாத வகையில் மொத்தம் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது, சேலம் மற்றும் மதுரையில் டில்லி எய்ம்ஸ்க்கு இணையான மருத்துவமனைகள், பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதித்ததுடன், புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்ட காரணமாக அமைந்தது, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதை இல்லாமல் அனைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கியது, சேலம் ரெயில்வேக் கோட்டம் அமைத்தது என பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தமிழக நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் எண்ணிலடங்காதவை.
1989–ம் ஆண்டு முதல் 1996–ம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க. தனித்து போட்டியிட்டு அதன் செல்வாக்கை வளர்த்து வந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில், திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்ததன் மூலம் பா.ம.க.வின் வளர்ச்சி தடைபட்டது.
இதை உணர்ந்துதான் இனிவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதென 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு எடுக்கப்பட்டது. அதில் உறுதியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி இனிவரும் தேர் தல்களில் திராவிட கட்சிகள், தேசியக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைப்பதில் உறுதியாக உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி அதன் 25–ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், அது சந்தித்து வந்த சோதனைகள் சுக்கு நூறாக சிதறுவது உறுதி. வெள்ளிவிழா ஆண்டு நாம் வெற்றிகளை குவிப்பதற்கான அடித்தளமாக அமையும். 25 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் நலனுக்கு எவையெல்லாம் தேவை என பாட்டாளி மக்கள் கட்சி கருதியதோ, அவையெல்லாம் இன்னும் நிறை வேற்றப்படாமல் தான் உள்ளன.
46 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் மது, இலவசம், திரைப்படம் ஆகிய கலாச்சாரங்களால் சீரழிந்த தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் காலம் இட்ட கட்டளைப்படி 2016–ம் ஆண்டில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி, திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி எங்களின் பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Monday, July 15, 2013

பெட்ரோல் விலை ரூ.1.95 உயர்வு: சாமானிய மக்கள் மீதான சுரண்டல்: ராமதாஸ் கண்டனம்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மீண்டும் ஓர் இடி இறக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது; இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டது என்று கூறி பெட்ரோல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.1.55 உயர்த்தியுள்ளது. உள்ளூர் வரிகளுடன் சேர்த்து சென்னையில் ஒரு  லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.95 அதிகரித்திருக்கிறது.
இது கடந்த ஒன்றரை மாதத்தில் செய்யப்பட்டுள்ள நான்காவது விலை உயர்வு ஆகும். கடந்த மே மாதம் 30&ஆம் தேதி ரூ.65.90 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது ரூ.73.60 ஆக உயர்ந்துள்ளது. ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.70 உயர்த்தப்பட்ட கொடுமை இதுவரை நடந்ததில்லை. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால், அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் மக்கள் மூச்சுமுட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல் விலை மேலும் ரூ.1.95 உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் செயலாகும்.
 வெளிச்சந்தையில் ஏற்படும் பாதிப்புகள் மக்களைத் தாக்காமல் பார்த்துக்கொள்வது தான் ஓர் அரசின் கடமை ஆகும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உலக சந்தையை காரணம் காட்டி, பெட்ரோல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திக்கொண்டே சென்றால் அரசுக்கும், லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட தனியார் நிறுவனங்களுக்கும், வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் மீதான விலை நிர்ணய உரிமையை ரத்து செய்து, மத்திய அரசே அதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Thursday, July 11, 2013

பா.ம.க.வுக்கு எதிரான அடக்குமுறை: தமிழக ஆட்சியாளர்கள் பதில் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை: அன்புமணி

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 11.07.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரக்காணம் கலவரத்தில் இரு அப்பாவி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு அறவழியில் போராடிய ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி முன்னணி நிர்வாகிகளுக்கு எதிராக தமிழக அரசு மிகக்கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
விழுப்புரத்தில் போராட்டம் நடத்துவதற்காக சென்ற பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசை கைது செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த தமிழக அரசு, 20 மணி அலைக்கழிப்புக்குப் பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் விடுதலையாகி விடக் கூடாது என்பதற்காக அடுத்தடுத்து 5 பொய்வழக்குகளில் அவரை தமிழக அரசு கைது செய்தது.
சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கொட்டடியில் அடைத்த அரசு, மருத்துவ உதவிகளையும் வழங்க மறுத்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேபோல், என்னையும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட நிர்வாகிகளையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களையும் கைது செய்த காவல்துறை சிறைகளில் அடைத்து பல்வேறு  இன்னல்களுக்கு உள்ளாக்கியது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக இந்தியாவில் இதுவரை இல்லாத அடக்குமுறையாக ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டும், அவருக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு  மறுத்து வருகிறது.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகும். அரசியல் சட்டத்தின்படி தனி மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை மனித உரிமைகளை சற்றும் மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணனை கடந்த ஜூன் 6ஆம் தேதி தில்லியில் சந்தித்து மனு அளித்தேன்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் எனது முறையீடு குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. தமிழ்நாட்டில் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்கும், மனித உரிமைகள் மீறப்பட்டதற்கும் முதல்நோக்கு ஆதாரம் இருப்பதை உறுதி செய்த தேசிய மனித உரிமை ஆணையம், எனது முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனருக்கும் ஆணையிட்டிருக்கிறது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்யும்படி ஜூன் 29ஆம் தேதியிட்ட கடிதம் மூலமாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான முதல் நடவடிக்கை ஆகும்.
ஆனால், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுக்குப் பிறகும் தமிழக அரசு அதன் மனித உரிமை மீறல் போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை. ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டும், அதை மதிக்காமல் அவர்கள் அனைவரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டங்களில்  தமிழக அரசு மீண்டும் கைது செய்திருக்கிறது. பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஜம்மு காஷ்மீரில் கூட கடந்த சில ஆண்டுகளில் 86 பேர் மீது மட்டுமே தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் மீது தடுப்புக் காவல் சட்டம் ஏவப்பட்டிருப்பது மனித உரிமை மீறலின் உச்சகட்டமாகும். இதற்கெல்லாம் தமிழக ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளும் பதில் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, July 4, 2013

குரு கைதுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை : பா.ம.க., பிரமுகர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்ள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீக்கிய பின்னரும் தமிழக அரசு குருவை கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்த அவர், இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப் ‌போவதாகவும் தெரிவித்துள்ளார்.

குரு மீண்டும் கைது! அன்புமணி கண்டனம்!தமிழக அரசு மீது வழக்கு தொடரவும் முடிவு!

பாமக எம்எல்ஏ ஜெ.குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.  இந்த நடவடிக்கைக்கு பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்ள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நீக்கிய பின்னரும் தமிழக அரசு குருவை கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்த அவர், இது தொடர்பாக தமிழக அரசு மீது வழக்கு தொடரப் ‌போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஜெ.குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை ரத்து செய்ய மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்தநிலையில் மீண்டும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆணை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம புழல் சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

வன்னிய சமுதாயத்துக்கு எதிராக அதிமுக அரசு ஏவி விட்டுள்ள அடக்குமுறையின் உச்சகட்டம் இதுவாகும்: ராமதாஸ் கண்டனம்

 
தேசிய  பாதுகாப்புச் சட்டத்தில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளதற்கு அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘’ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய உள்துறை அமைச்சகம் அந்த நடவடிக்கையை ரத்து செய்தது.

இதன் பிறகாவது தமிழக அரசு அதன் தவறை உணர்ந்து, தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, ஜெ. குருவை பழி வாங்கும் நோக்குடன் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட ஒருவரை, அவர் மீது புதிதாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத பட்சத்தில்,  மீண்டும் அதே சட்டத்தில் கைது செய்ய முடியாது.  ஆனால் சட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக அரசு, ஜெ.குரு சிறையிலிருந்து விடுதலை ஆகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்துள்ளது.

பாமகவுக்கும், வன்னிய சமுதாயத்துக்கும் எதிராக அதிமுக அரசு ஏவி விட்டுள்ள அடக்குமுறையின் உச்சகட்டம் இதுவாகும்.  மிகப் பெரிய மனித உரிமை மீறலான இந்த நடவடிக்கைக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் அடக்குமுறைகள் அனைத்தையும்  நீதிமன்றத்தின் உதவியுடன் முறியடித்து வெற்றி பெறுவோம். அதுமட்டுமின்றி சட்டத்தை மதிக்காமல், தவறுகளுக்கு துணை போன  அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பணி நீக்கம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை பாமக மேற்கொள்ளும். எனவே அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் ஆதரவு அளிக்கக்கூடாது’’ என்று அவர் கூறியுள்ளார்

Tuesday, July 2, 2013

விசாரணை : எழிலகத்தில் குரு- அன்புமணி ( படங்கள் )

பாமக நடத்திய போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அறையில் நேற்று முதல் தொடங்கியது.  இன்றும் விசாரணை நடைபெற்றது.   

காடுவெட்டி ஜெ.குரு விசாரணைக்கு ஆஜரானார்.  குருவை சந்திப்பதற்காக அன்புமணிராமதாஸ் அங்கு வந்தார்.

 




காடுவெட்டி ஜெ.குரு மீதான தே.பா.சட்டம் ரத்து




 பாமக எம்.எல்.ஏ.  காடுவெட்டி ஜெ.குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

மேலும், பாமகவினர் 19 பேர் எடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது.  குரு உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

டீசல் விலை ரூ.50 பைசா உயர்வு: மக்கள் விரோத நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக கருதப்படும் டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. மாநில அரசால் வசூலிக்கப்படும் மதிப்பு கூட்டு வரியுடன் சேர்த்து டீசல் விலை லிட்டருக்கு 62 பைசா உயர்ந்துள்ளது.

சென்னையில் இதுவரைரூ.53.64 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 54.16 ஆக அதிகரிக்கும். டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறி கடந்த 6 மாதங்களாகவே டீசல் விலையை மத்திய அரசு மாதம் தோறும் உயர்த்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.50.13 ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ.54.16 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த 5 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு 8 ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படுவதாகவும், இதுவும் படிப்படியாக மக்கள் மீது சுமத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்து வரும் தவறான கொள்கைகளால் மக்கள் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். அரிசியில் தொடங்கி காய்கறிகள், இறைச்சி வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. அதேநேரத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் டீசல் விலை மீண்டும்  உயர்த்தப்பட்டிருப்பது உணவு உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் விலைகள் உயரவே  வகை செய்யும்.

 இதையெல்லாம்  மத்திய அரசு உணர்ந்திருந்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு என ஏழை மக்களால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களைக் கூறி டீசல் விலையை உயர்த்தி இருப்பது கடுமையாக கண்டிக்கத் தக்கதாகும். இது மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கை ஆகும்.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் கடமை தமிழக அரசுக்கும் உணடு. கடந்த 6 மாதங்களில் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மாநில அரசுக்கு லிட்டருக்கு சுமார் 84 பைசா வீதம் கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. தமிழக மக்களின் நலனில் அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், மக்களுக்கு ஓரளவாவது நிவாரணம் அளிக்கும் வகையில் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: