2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 05.04.2011 அன்று கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும். 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும்’’ என அறிவித்தார். அப்போது தெலுங்குதேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
உழவர்களால் போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யக்கூடாது. நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும், 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment