நாடக காதல் திருமணங்களால் பெண்கள் வாழ்க்கை பாதிக்கபடுகிறது பெண்ணியத்துக்கு எதிரானது மனித உரிமைக்கு எதிரானது தமிழ் பண்பாட்டிற்கே எதிரானது தமிழ் பண்பாட்டில் காதலே இல்லை என்றார் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சேலம் ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க ராமதாஸ்.
அப்போது 'அகநானூறு புறநானூறு' என்றுதானே தமிழ் இலக்கியங்கள் வாழ்வியலே அமைந்துள்ளன என பத்திரிக்கையாளர்கள் கூறியபோது, ‘’ அது வேறு’’ என்றார் ராமதாஸ்.
தொடர்ந்து, 'பெரியாரே காதலை எதிர்த்தவர் என்று சொல்லி, கீ.வீரமணி தொகுத்த பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை என்ற நாலாம் பாகத்தில் பெரியார் காதலை திட்டி எதிர்த்து பேசியது உள்ளது என்று படித்து காட்டினார்.பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க வெறும் பி.சி எம்.பி.சி மக்கள் மட்டுமல்ல எப்.சி எனும் உயர் சாதியினரும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்...பிராமண சங்க தலைவர் நாராயணன் எங்களுக்கு முழு ஆதரவு தரார். அவர் பாணியில் சொல்லனும்னா 'உங்களுக்கு ஆதரவு தருவது எங்களுக்கு பரிபூரண சம்மதம் 'என்றார்.
இந்த நாடக காதல் திருமணங்களால் பிராமணர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூர் சைடில் பலர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி எவனாவது வாலாட்ட முடியுமா?அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க முன்ன நிற்போம். காவல்துறை அரசுகிட்ட போவோம் கடத்தி போனவனை இழுத்துவந்து பெண்ணை மீட்ப்போம்...ஆனால் நாங்கள் வன்முறை அமைப்பில்லை....வன்முறை கூடாது எனும் அமைப்பு' என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கோ.க மணி,அகில இந்திய தேசிய பார்வர்டு ப்ளாக் தலைவர் அரசகுமார் உட்பட்ட பல்வேறு அமைப்பினரும் கூட இருந்தனர்.
No comments:
Post a Comment