சென்னை பாரிமுனையில் ராமதாஸ் தலைமையில் மதுக்கடை ஒன்றுக்கு பூட்டு போட பாமகவினர் முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது பேசிய ராமதாஸ், அரசே மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
விழுப்புரத்தில் பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் மதுக்கடைக்கு பூட்டு போட முயற்சித்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சேலத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் மதுக்கடைகளைப் பூட்ட முயன்றதால் கைதாகினர்.
முன்னெச்சரிக்கைக்கு எதிர்ப்பு
முன்னதாக கடந்த 2 நாட்களாக பாமகவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் திருவண்ணாமலை அருகே நூக்காம்பாடி என்ற கிராமத்தில் மதுபானக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறது. இதில் கடைக்குள் இருந்த இரண்டு பெட்டிகள் எரிந்து நாசமாகின. டாஸ்மாக் கடை ஊழியர்கள் புகாரின் பேரில் திருவண்ணாமலை பாமக நிர்வாகி பெரியண்ணனை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment