பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் வரும் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. 2013-ம் ஆண்டில் நடக் கும் முதல் பொதுக்குழு கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிப்பார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை ஏற்பார். முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றுவார். பா.ம.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
புதுச்சேரி மாநில பா.ம.க. நிர்வாகிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2012-ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
2013-ம் ஆண்டில் பா.ம.க. ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தப்பட்டு செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment