தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க இழப்பீடு வழங்கக் கோரி பாமக போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகம், காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. தமிழக அரசு செய்த முயற்சிகளில் ஒன்று கூட பலனளிக்கவில்லை. இந்த நிலையில், கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், தண்ணீர் இன்றி வாடும் பயிரைக் கண்டு வாடி நிற்கின்றனர்.
கடன் வாங்கி செலவு செய்த விவசாயிகள் ஒரு பைசாவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல், கடன்காரர்களாகி உள்ளனர்.
காவிரி மாவட்டங்களில் இதுவரை 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பா பயிர் கருகியதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்றால், தாங்கள் செலவு செய்த பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். இதில் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
அதைக்கொண்டு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி காலை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
No comments:
Post a Comment