சென்னையில் இன்று நடைபெற்ற பாமகவின் பொதுக்குழுவில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தாமதமின்றி அரசிதழில் வெளியிட வேண்டும், காவிரி பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்; தமிழ் நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் நுழையாமல் தடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல் மதுரை மாவட்டத்தில் நுழைய தடை விதிப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசுக்கு பொதுக் குழுவில் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment