பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆற்றங்கரையில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேரூந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், குடியரசுத் தலைவர் மாளிகையை பல நாட்கள் முற்றுகையிட்டு போரட்டங்கள் நடத்தப்பட்டன.
விருத்தாசலம் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்வாளிகள் 3 பேரும், அவர்களுக்கு துணையாக இருந்த 7 பேரும் குடிபோதையில் இருந்ததாகவும், குடிவெறியில் தான் இந்த செயலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு மது தான் முக்கிய காரணமாக உள்ளதென்றும் இதை தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மதுவை விற்று வருவாய் தேட துடிக்கும் தமிழக அரசு இதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இனியாவது மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை செயல்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;; என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment