மதுரையில் ஒரு கூட்டத்தில் ராமதாஸ் பேசிய பேச்சு, குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறி வைத்து பேசப்பட் டிருப்பதாக கூறி அவரை இரண்டு மாத காலத்திற்கு மதுரைக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டு மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராமதாஸ் பேசினார்.
பாமக நிறுவுனர் ராமதாஸ் அண்மைக் காலமாக நடத்தி வரும் அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளின் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. தொடர் கூட்டத்தின் 4 வது ஆலோசனைக் கூட்டமான இது, சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘’வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில், திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அடுத்து வரும் 24ம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் அமைதி வழி போராட்டம் நடத்தப்படும்.
என்னை ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லும் தகுதியும் உரிமையும் யாருக்கும் இல்லை என்று கூறிய ராமதாஸ், அனைத்து ஊர்களிலும் காதல் திருமணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்காக நடவடிக்கை எடுக்க, விசாரணைக் குழு அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.இங்கு வந்திருக்கும் பிரதிநிதிகளின் சாதிகளுக்குள்ளே நடைபெறும் காதல் திருமணங்களை ஆதரிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், சொந்த மாமன் மகள், அத்தை மகன் என உறவு இருந்தாலும், ஆண் படிக்காதவனாக, ஊர் சுற்றியாக, மதுவுக்கு அடிமை ஆனவனாக, இதுபோன்ற லாயக்கற்றவனாக இருந்தாலேயே யாரும் பெண் கொடுக்க விரும்ப மாட்டார்கள்; வீடு புகுந்து வெட்டுவார்கள்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment