Saturday, May 12, 2012

நான் மத்திய அமைச்சராக இருந்த போது..... :அன்புமணி ராமதாஸ் பேச்சு

தஞ்சை மாவட்ட பா.ம.க. மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலினின் இளைய சகோதரரும், ஆடுதுறை பேரூராட்சி கவுன்சிலருமான பாலு என்கிற ம.க. பாலதண்டாயுதம்- உமாமகேஸ்வரி திருமண விழா விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் அவர் பேசும்போது, ‘’இங்கு நடைபெறும் திருமணம் நமது வீட்டு திருமணம். பா.ம.க. மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் கட்சிக்காகவும், டாக்டர் ராமதாசுக்காகவும் 18 முறை சிறைசென்றவர். இங்கு நடைபெறுவது மாறுபட்ட சீர்திருத்த திருமணம் ஆகும். இதில் ஆசிர்வாதம் மட்டும் இருக்கும். இங்கு நடக்கும் திருமணத்தில் நானோ மற்ற கட்சி பிரமுகர்களோ தாலி எடுத்து கொடுக்க மாட்டோம். ஆனால் மணமக்களின் தாய்க்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி மணமக்களின் தாய்தான் தாலியை எடுத்து கொடுப்பதால் இது மாறுபட்ட சீர்திருத்த திருமணமாகும். பெண்கள் நாட்டின் கண்கள். பெண்கள் படித்தால் குடும்பமே படித்த மாதிரி. இத்திருமணம் எளிமையான திருமணம். மணமக்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். நான் மத்திய அமைச்சராக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் கொண்டு வரப்பட்டது. அது உலக அளவில் பெரிய திட்டம் ஆகும். 108 ஆம்புலன்ஸ் திட்டம் அமெரிக்காவின் திட்டம் 911யை அடிப்படையாக கொண்டது. இந்தியாவில் 25 மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுகிறது. ஆம்புலன்சிலேயே பலருக்கு பிரசவம் ஆகிவிடு கிறது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தோம். ரெயில்வே துறையில் அகலப்பாதை கொண்டு வந்ததும் பா.ம.க.தான். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி, தரமான சுகாதாரம், விவசாயிகளுக்கு இடு பொருட்கள் இலவசம். ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு டிராக்டர் இலவசம். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4ஆயிரம் கொடுக் கப்படும். மகாபலிபுரத்தில் வன்னியர் மாநாட்டில் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் செங்கல்பட்டிலிருந்து நடந்து வந்துள்ளனர். உணர்வின் அடிப்படையில் கலந்து கொண்டனர். வன்னியர் யாரும் உயர்பதவியில் இல்லை. வன்னியருக்கு 20சதவீதம் இட ஒதுக்கீடு செய்யவேண்டும். எல்லா சமுதாயத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். வருகிற செப்டம்பர் 17-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது. அது பற்றி டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார். பசுமை தாயகம் சார்பில் பூம்புகாரில் மகளிர் மாநாடு நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். இதுவரை 25லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வாரியுள்ளோம். 50தடுப் பணைகள் கட்டியுள்ளோம். ஒரு வருடத்துக்கு ஒரு மரமாவது நடவேண்டும்’’என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: