Monday, March 7, 2011

தொகுதிகள் குறைப்பில்லை: பாமக

சென்னை, மார்ச் 7: பாமகவுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் குறைக்கப்படுவதாக வெளியான செய்திகளை அந்தக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி மறுத்துள்ளார்.

திமுக அணியில் காங்கிரஸ் இடம்பெறக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸýக்கு 60 தொகுதிகளை ஒதுக்க திமுக ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சி 63 தொகுதிகளை கேட்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகியது. இதற்கான ராஜிநாமா கடிதங்களை அளிப்பதற்கு முன்பாக, காங்கிரஸ் தலைமை திமுகவுடன் பேசியது. ராஜிநாமா நடவடிக்கை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் பாமகவுக்கு அளிக்கப்பட்ட 31 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் பறிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பாமக தேர்தல் குழு சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியது:

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

நடத்தியுள்ளோம். தொகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருந்தது என்றார் ஜி.கே.மணி.

தொகுதிகள் குறைப்பில்லை: காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதற்காக பாமகவுக்கு கொடுத்துள்ள 31 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் குறைக்கப்படுகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மணி, அதுபோன்று தொகுதிகள் ஏதும் குறைக்கப்படாது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: