Friday, March 4, 2011

மும்மடங்கு உற்சாகத்துடன் திமுக கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவோம்-பாமக

திண்டிவனம்: திமுக கூட்டணியின் வெற்றிக்காகவும், முதல்வர் கருணாநிதியை 6வது முறையாக முதல்வராக்கவும் மும்மடங்கு உற்சாகத்துடன் பணியாற்றுவோம் என்று பாமக கூறியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களில் சில..,

- தமிழகத்தில் நடைபெறும் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி பாமகவினர் தேர்தல் ஆணையத்திற்கு தந்திகளை அனுப்பிட வேண்டும்.

- தேர்தல் எப்போது நடந்தாலும், முதல்வர் கருணாநிதியை, 6வது முறையாக முதல்வர் பதவியில் அவரை அமர்த்த உறுதி பூண்டுள்ளோம்.

- திமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு மும்மடங்கு உற்சாகத்துடன், வேகத்துடன் பணியாற்றுவோம்.

- பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே கூட்டணியில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இரு சமூக மக்களுக்கிடையிலான ஒற்றுமையை அதிகரிக்க உதவும்.

- தமிழகத்தில் சமூக நீதி தழைக்கவும், சமச்சீர் கல்வி நிலைக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம். அரசின்நலத் திட்டங்களுக்கு துணை நிற்போம்.

- ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கிட வேண்டும்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: