Tuesday, September 2, 2014

ஜெயலலிதாவுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன்! ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேச்சு!

 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே செவ்வாய்க்கிழமை பாமக சார்பாக மதுக்கடைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், 

ஒரு இனத்தை அழிக்க, ஒரு நாட்டை அழிக்க போர் தொடுக்க வேண்டும் என்பார்கள். அந்த போரில் பயங்கரமான ஆயுதங்களை பயன்படுத்துவார்கள். அந்த ஆயுதங்களைவிட மோசமானது மது. இந்தியாவில் ஒரு ஆண்டில் 18 லட்சம் பேர் மதுவால் உயிரிழக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் பேர் இறக்கின்றனர். 

மது அருந்தினால் 2 ஆயிரம் வகையான நோய்கள் வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் இவற்றிற்கு முக்கிய காரணம் மது. இப்போது பல மாநிலங்களில் மது விலக்கு உள்ளது. சமீபத்தில் கேரள அரசு பார்களை மூட உத்தரவிட்டுள்ளது. அங்கே மூடுகிறார்கள். இங்கே ஏராளமான மதுக்கடைகளை திறந்துகொண்டே இருக்கிறார்கள். 

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் ஒரு சாவல் விடுகிறேன். மதுக்கடைகள் பிரச்சனையை முன் வைத்து வருகின்ற சட்டசபை தேர்தலில் நீங்கள் போட்டியிட தயாரா? நாங்கள் அந்த பிரச்சனையை முன் வைத்து போட்டியிட தயார். மதுவின் தீமைகளை சொல்லி நாங்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறோம். நீங்கள் மதுவால் நன்மை, மதுக்கடைகளால் நன்மை என்று பிரச்சாரம் செய்ய தயாரா? இதைச் சொல்லி நீங்கள் தேர்தலில் நிற்பீர்களா? 

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டிலே இந்த மது சூறையாடிவிட்டது. எனவே மதுவிலக்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடுவோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: