மதுவிலக்கு கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிபெருமாள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி சென்னை மெரினா காந்தி சிலை அருகே தனது உண்ணாவிரத்தை ஆரம்பித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
முதல் நான்கு நாள் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்த அவரிடம் போலீசார் வற்புறுத்தல் காரணமாக, தண்ணீர் மட்டும் குடித்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி, 19ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வலுக்கட்டாயமாக குலுக்கோஸ் ஏற்றியுள்ளனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
மீண்டும் 23ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணி இல்லத்தில் தனது உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது உடல் நலம் குறித்து விசாரித்தார். மதுவிலக்கு கோரி தான் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்தும், அரசுக்கு கொடுத்து வரும் அழுத்தங்கள் குறித்தும் ராதாஸ் சசிபெருமாளிடம் கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment