இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்விபெறும் உரிமைச்சட்டத்தின் படி சமூக பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய 25 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் இடம் ஒதுக்க மறுத்துவிட்டதை எதிர்த்து சில பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம்
இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசின் பொறுப்பின்மையும்,
அக்கறையின்மையுமே காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. தமிழக அரசுக்கு
அக்கறை இருந்திருந்தால் இந்த வழக்கில் அரசின் சார்பில் வாதிட தலைமை
வழக்கறிஞரையோ அல்லது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரையோ
அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி இருந்தால் நீதிமன்றம் எழுப்பிய
பல்வேறு வினாக்களுக்கு விடை அளித்திருக்க முடியும்.
தனியார் பள்ளிகள்,
தற்போது உயர்நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை பயன்படுத்திக்கொண்டு,
இனிவரும் காலங்களில் கல்விபெறும் உரிமைச்சட்டத்தை செயல்படுத்த மறுக்கும்
வாய்ப்பு உண்டு.
இந்த ஆபத்தை
தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை
மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனுதாக்கல் செய்யவேண்டும். அதன் மீதான
விசாரணையின் போது உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்து, ஏழை
குழந்தைகளின் கல்விபெறும் உரிமையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு டாக்டர்
ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment