அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின்
முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமான இளைஞர்கள் தேவை. ஆகையால் தான் தமிழ்நாட்டில்
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.
ஏதோ இந்த ராமதாஸ்
ஒட்டுக்காகவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் மது ஒழிப்பை
கொண்டு வர சொல்லவில்லை. எங்களுக்கு வருங்கால தலைமுறையான இளைஞர்கள் தான்
முக்கியம். அவர்கள் சீரழிவதை தடுக்க வேண்டும். இளைஞர்கள் சீரழிவதை தடுக்க
தமிழக அரசுமதுக்கடைகளை மூட வேண்டும்.
1989ம் ஆண்டு ஜுலை மாதம் 16 ந் தேதி பா.ம.க தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய 2 மாத்திலேயே காந்தி பிறந்த அக்டோபர் 2 ந் தேதி பெண்களை திரட்டி மதுகடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். இன்று வரை மதுவுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
கடந்த ஆண்டு அரசுக்கு
மது விற்பனை மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. வரும் ஆண்டு அரசு
மது விற்பனையை ரூ.21 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்து உள்ளது. என்னுடைய
தலைமையில் வருகிற 11 ந் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும்
அறவழிப்போராட்டம் நடைபெறுகிறது. இன்னும் 6 மாதத்திற்குள் அரசு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடவில்லை என்றால் நாங்கள்
பூட்டு போட்டு நிரந்தரமாக மூட வைப்போம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment