|
பாட்டாளி மக்கள்
கட்சியின் இளைஞரணி செயலாளர் அறிவுச் செல்வன் திருச்சி அருகே இன்று அதிகாலை
நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும்,
வேதனையும், ஆற்றொனாத் துயரும் அடைந்தேன்.
அறிவுச்செல்வன் பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர், மண்டல மாணவரணி செயலாளர், மாநில மாணவரணித் தலைவர், மாநில இளைஞரணித் தலைவர், மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து திறம்படி செயலாற்றி வந்தவர். கட்சியின் வளர்ச்சிக்காகவும், பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம்மையே அர்பணித்துக்கொண்டவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும், மரியாதையும் கொண்டவர். பாமக சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறைக்கு சென்றவர்.
மாணவர் பருவத்தில்
இருந்தே பாட்டாளி மக்கள் கட்சியில் துடிப்புடன் செயல்பட்டு வந்த
அறிவுச்செல்வன் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவு செய்தியை தாங்கிக் கொள்ளமுடியாமல் கண்ணீரில் மிதக்கிறேன்.
அவரது மறைவால் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும். அவரை இழந்து
வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment