அரசுக்கு ராமதாஸ் விதித்த ஆறு மாத கெடு
கோவை, காந்திபுரத்தில்
பா.ம.க., சார்பில், நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.
முன்னதாக,
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’தமிழகம் மதுவால் தள்ளாடிக்
கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, குடிக்கும் வயது 25 ஆக இருந்தது.
தற்போது 13 வயதிலேயே, பள்ளிச் சிறுவர்கள் கூட, குடிப்பழக்கத்துக்கு
அடிமையாகி விடுகின்றனர்.
2003ம் ஆண்டு, "டாஸ்மாக்' துவங்கியபோது, 2,800 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்தது. தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால், 22 ஆண்டுகளாக, பா.ம.க., மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.மதுக்கடைகளை, அரசே நடத்தும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

|
போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்மு றைகள் பெருகியுள்ளன. தினமும் 100 ரூபாய்க்கு மது குடிப்பதால், தனி மனிதன் ஒருவரிடம் இருந்து, ஐந்தாண்டுகளுக்கு அரசுக்கு, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
ஆனால், குடிப்பழக்கம் மனிதனை மிருகமாக்குகிறது.போதையில் வரும் கணவன், மனைவியை தாக்கி, துன்புறுத்துகிறான்; மகளிடம் கூட தவறாக நடக்கிறான். மதுவை ஒழிப்பதால், இது போன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்கும்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment