இந்த கூட்டத்தில் இளைஞர்
அதிகமாக உள்ளனர். வன்னியர்கள் இதுவரை ஆளவில்லை. காரணம் வன்னியர்களிடம்
ஒற்றுமை இல்லை என்றனர். ஆனால் இப்போது ஒற்றுமை வந்து விட்டது. நாம் ஆள
வேண்டும்.
இந்த முறை நாம் ஆண்டே தீரணும். இதற்கு எந்த தியாகத்தையும் செய்ய நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். நமது இனத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் மாம்பழத்திற்கு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட தயாராகி விட்டனர்.
தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் அரசியல் கட்சிகள். இதில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வன்னியரை பற்றி சிந்தித்தது கிடையாது, பேசியது கிடையாது.
சினிமா படங்களை பாருங்கள் ஆனால் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment