Monday, March 21, 2011

கருணாநிதி தலைமையில் புதிய அரசு அமைய நிபந்தனைகளற்ற ஆதரவு -ராமதாஸ்

சென்னை: ""கருணாநிதி தலைமையில் புதிய அரசு அமைய நிபந்தனைகளற்ற ஆதரவு அளிப்போம். இந்த ஆதரவு, ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் அளித்த பேட்டி:பூரண மதுவிலக்கு எங்களின் மூச்சு. இதை வலியுறுத்தி, 32 மாவட்டங்களில் மாநாடுகளை நடத்தியுள்ளோம். இதில், இரண்டாயிரம் முதல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர். எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்த தி.மு.க., தலைமையில் அரசு அமைந்தால் வலியுறுத்துவோம். அதற்கான எங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.சென்னை அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்று, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் துணைநகரம் உருவாக்குவதை வரவேற்போம். "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தால் தி.மு.க., கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முன்னிறுத்தி, எதிர் அணி செய்யும் பிரசாரத்தை முறியடிக்க தனித் திட்டம் வகுத்துள்ளோம்.



ஏழைகளுக்கு இலவசங்கள் அளிப்பதை குறை கூறுபவர்கள் முதலாளிகளுக்கு வரிவிலக்கு அளிப்பதையும், பொருளாதார மண்டலங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு வரிவிலக்கு வழங்குவதையும் இலவசமாகக் கருதி கண்டிக்க வேண்டும்.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. எனவே, அது பற்றிய பேச்சே எழவில்லை.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: