சென்னை, மார்ச் 20: திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் வெற்றித் திருமகள் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
இது குறித்து தினமணி நிருபரிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:
2006-ல் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்று போற்றப்பட்டது. திமுக ஆட்சி அமைக்க இந்த தேர்தல் அறிக்கைதான் காரணமாக அமைந்தது. ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, விவசாய கடன் தள்ளுபடி என்று அனைத்து வாக்குறுதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் திமுக நிறைவேற்றியுள்ளது.
இப்படி சொன்னதை செய்ததோடு மட்டுமல்ல கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், 108 ஆம்புலன்ஸ் என்று சொல்லாததையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.
முதல்வர் கருணாநிதி "கதாநாயகி' என்று வர்ணித்துள்ள இந்த தேர்தல் அறிக்கையில் இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியத்துடன் ரூ. 4 லட்சம் கடன், கல்விக் கடனுக்கான வட்டியை அரசே ஏற்பது, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
2006 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை தேர்தல் அறிக்கை வெற்றியைத் தேடித் தரும் வெற்றித் திருமகளாகும் என்றார் ஜி.கே. மணி
Sunday, March 20, 2011
வெற்றித் திருமகள்: திமுக தேர்தல் அறிக்கை குறித்து பாமக கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment