Wednesday, March 23, 2011

கருணாநிதி ஒரு அரசியல் தியாகி-சிறந்த ஸ்டேட்ஸ்மேன்-ராமதாஸ்

திருவாரூர்: முதல்வர் கருணாநிதி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த ஸ்டேட்ஸ்மேன், அரசியல் தியாகி என்று பாராட்டினார் டாக்டர் ராமதாஸ்.


திருவாரூர் திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

கருணாநிதி, ஒரு அரசியல்வாதி அல்ல. அரசியல் தியாகி. எழுத்தாளர், கவிஞர் எல்லாவற்றுக்கும் மேலாக பகுத்தறிவாளர். அப்படிப்பட்ட கருணாநிதி, சொந்தமண்ணில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்கள், எங்கள் வீட்டு பிள்ளை இங்கே போட்டியிடுகிறார் என்று எல்லா வாக்குகளையும் அவருக்கு அளிக்க இருக்கின்றனர். அவரை எதிர்த்து நிற்பவர் டெபாசிட் கூட வாங்கப்போவதில்லை.

தேர்தலுக்கு 20 நாட்கள் கூட இல்லாத நிலையில் தேர்தலுக்கு மக்கள் இறுக்கமாக இருப்பார்கள். யாருக்கு ஓட்டு என்று கேட்டால் சொல்ல மாட்டார்கள். ஆனால், இன்று தமிழகத்தில் உள்ள மக்கள், யாரைப் பார்த்தாலும் ஏழையாக இருந்தாலும், நடுத்தரமக்களாக இருந்தாலும், வசதி படைத்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களைக் கடந்து தி.மு.க. கூட்டணிக்குத்தான் ஓட்டு என்கின்றனர்.

இது போன்ற நிலைமை எப்போதும் இருந்ததில்லை. 20 நாட்கள் இருக்கின்ற நிலையிலே இப்படி என்றால் நாளாக, நாளாக ஒட்டு மொத்த தமிழகத்தில் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்க தயாராகி விடுவார்கள். பா.ம.க. கருணாநிதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: