Monday, March 28, 2011

சிறுவர்களை வைத்தே சின்னங்களை வரையலாம்: ராமதாஸ்

தருமபுரி, மார்ச் 28: தி.மு.க. கூட்டணிக் கட்சி சின்னங்களை சிறுவர்கள் கூட வரைய முடியும், அதற்காக ஓவியரைத் தேட வேண்டாம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. வேட்பாளர்களாக தருமபுரியில் பெ. சாந்தமூர்த்தி, பாலக்கோட்டில் பாடி செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பென்னாகரத்தில் பி.என்.பி. இன்பசேகரன், பாப்பிரெட்டிப்பட்டியில் வ. முல்லைவேந்தன் ஆகியோர் தி.மு.க. வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இவர்களைத தவிர விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பொ.மு. நந்தன், அரூர் தனித் தொகுதியில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகிறார். மேற்கண்ட 5 வேட்பாளர்களின் சின்னங்களை கிராமப்புறங்களில் வரைய ஓவியரைத் தேடுவதில் நேரத்தை செலவிட வேண்டாம் என ராமதாஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தருமபுரிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாவது: தி.மு.க. கூட்டணியில் உள்ள சின்னங்களான உதயசூரியன், மாம்பழம், மெழுகுவர்த்தி ஆகியவற்றை பள்ளிக் குழந்தைகள் கூட எளிதில் வரைய முடியும்.

சிறுவர்களை அழைத்து வந்தே கிராமப்புறங்களில் சின்னங்களை வரையலாம். சிறுவர்கள் இல்லையெனில் கூட்டணிக் கட்சித் தொண்டர்களே சின்னங்களை வரைய வேண்டும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: