Monday, March 7, 2011

மருத்துவம் படிக்க பொது நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 7: மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற முடிவை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

"எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி. முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதித் தேர்வை நடத்தலாம் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை மத்திய, மாநில அரசுகள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் அரசியல்சட்ட அமர்வுக்கு எடுத்துச் சென்று, தடையாணை பெற வேண்டும். வரும் கல்வியாண்டில் இதனை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது.

உயர் கல்வியில் மாணவர்களை எந்த முறையில் சேர்ப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது ஆபத்தானது. அரசின் கொள்கை முடிவாகக் கருதி இப்பிரச்னையை மத்திய, மாநில அரசுகளின் முடிவுக்கு நீதிமன்றங்கள் விட்டுவிடுவதுதான் சமூக நீதியாகும்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாட திட்டம், சமச்சீரான கல்வி, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், நாடு முழுவதும் பொதுவான நுழைவுத் தேர்வு எப்படி சாத்தியமாகும்.

1950-களில் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆபத்து வந்தபோது, தமிழகமெங்கும் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடியதால் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதைப்போல, பொது நுழைவுத் தேர்வு என்ற இந்த ஆபத்தையும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும், இதில் அரசியல் கூடாது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: