Friday, March 25, 2011

பொய்யின் மொத்த உருவம் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை: பா.ம.க., ராமதாஸ்

திண்டுக்கல்: ""பொய்யின் மொத்த உருவமான அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.



திண்டுக்கல்லில் தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் கிரைண்டர், மிக்சி தருவதாகவும், பெண்களின் திருமணத்திற்கு ரூ.30 ஆயிரமும், படிப்பிற்கு ரூ.20 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்தார். பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் காப்பியடிக்கும் போது, பறக்கும் படையினரிடம் சிக்கிக் கொள்வான். இதுமாதிரி தி.மு.க., தேர்தல் அறிக்கையை, ஜெயலலிதா காப்பியடிப்பது வெளியிட்டுள்ளார். இதை மக்கள் கண்டுபிடித்து விட்டார்கள். ஏழைகளுக்கு ஆடு, மாட்டை இலவசமாக வழங்குவாராம். ஜெயலலிதா தமிழர்களை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார். கருணாநிதி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் தந்து, நன்றாக படித்து, தமிழர்கள் உலக அரங்கில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்.



தமிழகத்தில் 30 லட்சம் பேர் வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கு எப்படி ஆடு, மாடு கொடுக்க முடியும். பொய்யின் மொத்த உருவமான அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். கடந்த காலத்தில் ஜெயலலிதா, தனது வளர்ப்பு மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்பு, அவர் மீதே கஞ்சா வழக்கு போட்டார். ஒரே நாளில் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார். மீண்டும் கருணாநிதி முதல்வராக நீங்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை விதித்துள்ளது. வாகன சோதனை என்ற பெயரில் பலவித இன்னல்களுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வணிகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சித்தன் எம்.பி., திண்டுக்கல் பா.ம.க., வேட்பாளர் ஜே.பால்பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: