Saturday, March 19, 2011

மேலும் 15 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச் 19: மேலும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக தலைவர் ஜி.கே. மணி சனிக்கிழமை வெளியிட்டார்.

அதன் விவரம்:

ஓமலூர் - அ. தமிழரசு, பர்கூர் - தி.க. ராசா, புவனகிரி - த. அறிவுச்செல்வன், காஞ்சிபுரம் - போ.ச. உலகரட்சகன், எடப்பாடி - மு. கார்த்திக், பவானி- கா.சு. மகேந்திரன், பரமத்திவேலூர் - சி. வடிவேல் கவுண்டர், கும்மிடிப்பூண்டி - கே.என். சேகர், பூம்புகார் -க. அகோரம், செஞ்சி - அ. கணேஷ்குமார், பாலக்கோடு - பாடி வெ. செல்வம், தருமபுரி - பெ. சாந்தமூர்த்தி, திண்டிவனம் (தனி) - மொ.ப. சங்கர், திண்டுக்கல் - ஜே. பால்பாஸ்கர், வேளச்சேரி - மு. ஜெயராமன்.

இதுவரை மயிலம், வேதாரண்யம் தவிர 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: