Wednesday, March 23, 2011

20 ஆண்டு கனவு நனவாகிவிட்டது: ராமதாஸ் மகிழ்ச்சி

சேலம்: பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றாக கைகோர்த்து ஒரு அணியில் இருக்கிறது. 20 ஆண்டு கனவு தற்போது தான் நனவாகியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியதாவது,

முதல்வர் கருணாநிதி 6-வது முறையாக தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று மக்களே விரும்புகின்றனர். எங்கு திரும்பினாலும் இதைப் பற்றிய பேச்சு தான். அதற்கு காரணம் திமுக தேர்தல் அறிக்கை. தேர்தல் அறிக்கையின் நாயகன் முதல்வர் கருணாநிதி தான். அவர் ஒரு வெற்றித் திருமகன்.

இந்த தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது எல்லாம் நிறைவேற கருணாநிதியையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி வெறுவோம்.

திமுக தேர்தல் அறிக்கை வெளிவந்த பிறகு திமுகவின் வாக்கு சதவீதம் இன்னும் அதிகரித்துள்ளது. கூட்டணியில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். நம்முடன் விடுதலை சிறுத்தைகள் ஒன்றாக கைகோர்த்து இருக்கிறது. இந்த இரண்டு கைகளையும் யாராலும் பிரிக்க முடியாது. 20 ஆண்டு கனவு தற்போது நனவாகியுள்ளது.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தல் பணியாற்றி வருவதால் நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

வெற்றி வாய்ப்பு தான் பிரகாசமாக இருக்கிறதே என்று இருந்துவிடக் கூடாது. வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்திக்க வேண்டும். இந்த வாக்காளரை நான் 18 தடவை பார்த்து விட்டேன், 20 தடவை பார்த்து விட்டேன் என்று சொல்லும் வகையில் பணியாற்ற வேண்டும். வாக்காளர்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் மனதை மாற்ற வேண்டும்.

பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் அரவணைத்து தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். நாம் நிற்கும் தொகுதியை விட மற்ற தொகுதிகளில் 100 மடங்காக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பாமகவினருக்கு கட்டளையிட்டிருக்கிறேன். அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: