Monday, December 8, 2014

ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதா? அன்புமணி

தர்மபுரி: ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஒரு அடியை கூட விட்டுத்தரமுடியாது என்று தர்மபுரி எம்.பியும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஒகேனக்கல் எந்த மாநில‌ எல்லையில் அமைந்திருக்கிறது என்பது குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 68 கிமீ தூரத்துக்கு எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. மத்திய சர்வே ஆணையம் உடனடியாக கர்நாடக-தமிழக எல்லையை மறு வரையறை செய்யும் வகையில் சர்வே மேற்கொள்ள‌ வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.இதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்கு சொந்தம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். இரு மாநில உறவுகளை சுமுகமாக நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர், தேவையற்ற சர்ச்சைகளை கொண்டுவரக்கூடாது.ஒகேனக்கல் தமிழக பகுதி என்று முடிவாகி விட்டது. இதில் மறுஆய்வுக்கு வாய்ப்பு இல்லை. இதுபற்றி எந்த விதமான சர்ச்சையும் புதிதாக கொண்டுவர தேவையில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.கர்நாடக முதல்வர் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பிற அரசியல்வாதிகளும் இந்த பிரச்சினையை எழுப்பக்கூடாது. ஒகேனக்கல் என்னுடைய எம்.பி. தொகுதிக்குள் வருகிறது. அங்கு, ஒரு அடியைக்கூட விட்டுத்தர முடியாது என்று கூறியுள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: